(PHOTOS) அழகுராணிப் போட்டியில் ரெஸ்லிங் வீராங்கனை
இவ்வருடம் பிரித்தானிய அழகுராணி போட்டியில் ரெஸ்லிங் (மல்யுத்த) வீராங்கனையொருவரும் இப்போட்டியில் பங்குபற்றவுள்ளார்.
லோ பல்லார்ட் எனும் இந்த ரெஸ்லிங் வீராங்கனை இவ்வருடம் நடைபெறவுள்ள ‘மிஸ் கிரேட் பிரிட்டன்’ அழகுராணி போட்டியில் பங்குபற்றவுள்ளார்.
26 வயதான லோ பலார்ட், கடந்த 3 வருடங்களாக பளுதூக்கும் பயிற்சிகளை மேற்கொள்வதுடன் ரெஸ்லிங் போட்டிகளில் பங்குபற்றி வருகிறார்.
அதேவேளை தற்போது ‘மிஸ் பேர்சனாலிட்டி ஒவ் கிரேட் பிரிட்டன்’ எனும் அழகுராணி போட்டியிலும் அவர் சம்பியனாக விளங்குகிறார். இதன் மூலம் எதிர்வரும் 15 ஆம் திகதி நடைபெறவுள்ள மிஸ் கிரேட் பிரிட்டன் அழகுராணி போட்டியில் பங்குபற்றுவதற்கு அவர் தெரிவானார்.
5 அடி 9 அங்குல உயரமான லோ பலார்ட், தனது ஆண்களுடனும் ரெஸ்லிங் போட்டியில் பங்குபற்றுகிறார்.
‘நான் ஒவ்வொரு ஞாயிறு தினத்திலும் ரெஸ்லிங்கில் ஈடுபடுகிறேன். 16.5 ஸ்டோன் எடையுடை ஆண்களை தூக்கி தரையில் அடிப்பதில் எக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை’ என்கிறார் லோ பலார்ட்.
‘மிஸ் பேர்சனாலிட்டி ஒவ் கிரேட் பிரிட்டன்’ போட்டியில் வென்றதன் மூலம் நான் மிஸ் கிரேட் பிரிட்டன் அழகுராணி போட்டியில் பங்குபற்றுவதற்கு தகுதிபெற்றேன்.
நான் மிகவும் அதிர்ஷ்டசாலி என எண்ணுகிறேன். ஏனெனில் இப்போட்டிகளில் பங்குபற்றுவதற்கான வயதெல்லை 27 ஆகும். எனது 27 ஆவது பிறந்த தினத்துக்கு ஒருநாள் முன்னதாக இப்போட்டி நடைபெறுகிறது.
நான் ரெஸ்லிங் வீராங்கனையாக விளங்கும் நிலையிலும் பிரித்தானிய அழகுராணி போட்டியில் சாதிக்க முடியும் என்பதை மக்கள் பார்க்க வேண்டும் என விரும்புகிறேன்’ என லோ பலார்ட் தெரிவித்துள்ளார்.
Average Rating