“கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக”… -அரியதோர் புகைப்படங்களும், அதுகுறித்த செய்திகளும்..

Read Time:7 Minute, 55 Second

woman.migrant workersநாம் தினமும் எத்தனையோ போட்டோக்களை இணையதளங்களில் பார்கிறோம்.. அவற்றிள் சில போட்டோக்கள் நம்மை சிரிக்க வைக்கும், சில நம்மை சிந்திக்க வைக்கும், சில நம்மை சில நேரங்களில் அழக்கூட வைத்து விடும். இப்போ நம்ம பார்க்க இருக்கிறது அந்த படங்கள் தாங்க..

இதுல இருக்குற ஒவ்வொரு படமும் நிச்சயம் உங்களிடம் பேசும்.. அப்படி ஒரு உணர்ச்சிபூர்வமிக்க படங்கள் தான் இது, அதனால் சற்று மெல்லியமனம் கொண்டவர்கள் இந்த படத்தை பார்க்க வேண்டாம் என நானே கேட்டுக் கொள்கிறேன்.. அப்படி நீங்கள் இந்த படங்கள் முழுவதும் பார்த்தால், உங்களை மிகவும் பாதித்தது எந்த படம் என்று “கமென்டில்” சொல்லுங்கள்…


மனதிடம் பேசும் படங்கள்
போரினால் பாதிக்கப்பட்ட ஒரு நாட்டில் ஒரு சிறுவன் பசிக்கிறது என்று கூறுகிறான், அங்கு சேவை புரிய வந்திருக்கும் ஒருவரிடம்..


மனதிடம் பேசும் படங்கள்
23 மணி நேரம் தொடர்ச்சியாக நடைபெற்ற இந்த இதய மாற்று சிகிச்சையில் டாக்டரின் அஸிஸ்டேண்ட் தூங்குவகதையும், டாக்டர் விழித்திருப்பதையும் இந்த படத்தில் காணலாம்..


மனதிடம் பேசும் படங்கள் 
இதுதாங்க பல்லாயிரம் உயிர்களை பழிவாங்கிய Auschwitz கேஸ் சேம்பர்..


மனதிடம் பேசும் படங்கள் 
தந்தை மற்றம் மகன் புகைப்படம் எடுக்கப்பட்ட காலங்கள் (1949 vs 2009)..


மனதிடம் பேசும் படங்கள் 
இந்த புகைப்படத்தில் இருக்கும் சிறுவன் அழக் காரணம் அவனுக்கு வயலின் சொல்லி கொடுத்த ஆசிரியையின் இறுதி ஊர்வலத்தில் அவன் வயலின் வாசிப்பதற்காக.. மேலும் இந்த சிறுவன் குழந்தை தொழிலாளியாக இருந்தவன், அவனை அந்த ஆசிரியை தான் அழைத்து வந்து படிக்க வைத்தார்..


மனதிடம் பேசும் படங்கள் 
செசெனியாவுடன் நடந்த போரில் ரஷியா வீரர்கள் அந்த நாட்டில் உள்ள ஒவ்வொரு விட்டிற்குள்ளும் போய் மிருகதனமாக சுட்டார்கள்.. அங்கு ஒரு ரஷியவீரர் பியானோ வாசிக்கும் காட்சி..


மனதிடம் பேசும் படங்கள் 
தனது சகோதரன் தன் கண்ணெதிரே கொல்லப்பட்ட போது கதறும் இந்த மனிதர்.. மற்றும் அலட்சிய போலீஸ்..


மனதிடம் பேசும் படங்கள் 
உண்மையில் இது மிகவும் அருமையான படம்ங்க எகிப்தில் முஸ்லீம்கள் தொழுகைக்கு பாதுகாப்பு தரும் கிறிஸ்தவர்கள்..


மனதிடம் பேசும் படங்கள்
ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட காட்டுத் தீயை அணைக்க சென்ற வீரர் ஒருவர் அங்குள்ள ஒரு விலங்கினத்திற்கு தண்ணீர் கொடுக்கிறார்.. ஒரு நல்ல மனிதநேயம்..


மனதிடம் பேசும் படங்கள்
7 மாத பிரிவுக்கு பின் கன் மகளை பார்த்த தாயின் பாசம்.. இது அமெரிக்கா ஈராக் போர் சமயத்தில் எடுக்ப்பட்ட புகைப்படம் ஆகும்..


மனதிடம் பேசும் படங்கள் 
இந்த வேறெங்கும் இல்லைங்க நம்ம இந்தியா தான் இது.. அடுத்த வேளை உணவுக்காக காத்திருக்கும் மனிதர்கள்..


மனதிடம் பேசும் படங்கள் 
சன்சீர் எனப்படும் இந்த நாய் மும்மை போலீசில் சிறந்த பணியாற்றியமைக்கான மரியாதை தான்… இந்த நாய் மொத்தாக 3,329 kg RDX மற்றும் 600 டிட்டனேட்ரஸ் கண்டுபிடித்து பொதுமக்களை காப்பாற்றி சேவை புரிந்துள்ளது..


மனதிடம் பேசும் படங்கள் 
உலக வர்த்தக மையத்தில் இருந்து குதித்த மனிதர் ஆனால் இவர் இறக்கவில்லை..


மனதிடம் பேசும் படங்கள்
தனது குடிகார தந்தையை வீட்டிற்கு அழைத்து செல்ல முயற்சிக்கும் சிறுவன்..


மனதிடம் பேசும் படங்கள் 
இந்த தம்பதிகள் எப்படி உயிர் விட்டிருக்கிறார்கள் என்று பாருங்கள்..


மனதிடம் பேசும் படங்கள் 
தனது 5 வயது மகன் சிகரெட் பிடிப்பதை பார்த்து ரசிக்கும் தந்தையை பாருங்க..


மனதிடம் பேசும் படங்கள் 
மியான்மரில் புயலினால் தனது வாழ்வாதரத்தை தொலைத்த நபர் கண்ணீர் விடுகிறார்..


மனதிடம் பேசும் படங்கள் 
லியோ என்ற இந்த நாய் தினமும் உறங்குவது சுற்றுவது எல்லாமே தன்னை வளர்த்த அந்த எஜமானரின் கல்லறை அருகில் தான் கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த நாய் அந்த கல்லைறையை விட்டு நகரவேயில்லை.. அதற்கு உண்ண உணவு கல்லைறைகளை பராமரிப்பவர் கொண்டு வந்து தினமும் கொடுத்து செல்கிறார்..


மனதிடம் பேசும் படங்கள்
1940 எடுக்கப்பட்ட இந்த புகைப்படம் மிகவும் அழகானது போருக்கு செல்லும் தன் தந்தையை பிரிய மனமில்லாமல் அவரை கட்டி அணைக்க செல்லும் சிறுவன்..


மனதிடம் பேசும் படங்கள் 
ஜப்பானில் சுனாமி வந்தபோது அதில் தன் குடும்பத்தை தொலைத்த ஒரு மெண் கதறி அழும் காட்சி..


மனதிடம் பேசும் படங்கள்
இரண்டு வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள் திருமணம் செய்து கொண்டார்கள் 1888 ல் போலந்து நாட்டில் அவர்கள் இறந்தபின் வெவ்வேறு சுடுகாட்டில் அவர்களது உடல்கள் புதைக்கப்பட்டது, ஆனால் அந்த தம்பதியின் கடைசி ஆசைப்படி அமைக்கப்பட்ட அவர்களது கல்லறை..


மனதிடம் பேசும் படங்கள் 
தொலைந்த தனது நாய் வெகு நாட்கள் கழித்து திரும்ப கிடைத்த மகிழ்ச்சியில் அதை கட்டி அணைக்கும் அதன் உரிமையாளர்..


மனதிடம் பேசும் படங்கள் 
இவர் ஒரு ரஷ்ய போர் வீரர் இவர் தான் பயன்படுத்திய இந்த பீரங்கியை கண்ணீர் மழ்க பார்கிறார்..


மனதிடம் பேசும் படங்கள் 
1943 ல் நடைபெற்ற ரஷிய போரில் ரஷிய வீரர்களின் இறுதி பிராத்தனை..


மனதிடம் பேசும் படங்கள்
இந்த வெள்ளத்திலும் பூனைக்குட்டிகளை பத்திரமாக சுமந்து வரும் இவருக்கு ஒரு சல்யூட்ங்க..


மனதிடம் பேசும் படங்கள்
போர் வீரருக்கு பருக தேநீர் கொடுக்கும் மனிதர்..


மனதிடம் பேசும் படங்கள் 
பல வருடங்களாக தொலைந்த தனது மகளை தேடி வரும் பெற்றோர்.. இவர் தொலைந்த தேதி 1969 ல்.. இன்று வரை அவர்கள் பேப்பரில் விளம்பரம் கொடுக்கு தேடி வருகின்றனர்…

இந்த படங்களில் உங்கள் மனதை பாதித்த படம் எது என்பதை கமென்ட் செய்யுங்கள்…

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post (PHOTOS) நாய்களுடன் யோகாசனம்..!
Next post அழகிகள் சப்ளை; 1 லட்சம் டாலர் லஞ்ச வழக்கில் அமெரிக்க கடற்படை அதிகாரி கைது