By 11 November 2013 0 Comments

19 வயது தொலைக்காட்சி நட்சத்திரத்துடனான 53 வயது நடிகரின் திருமண வாழ்க்கை முறிந்தது..

2919_newsthumb_thumஅமெரிக்காவின் இளம் தொலைக்காட்சி நட்சத்திரங்களில் ஒருவரான கோர்ட்னி ஸ்டோடனின் சர்ச்சைக்குரிய திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது.

அமெரிக்காவில் விவாகரத்துகள் ஒன்றும் ஆச்சரியமில்லைதான். ஆனால், 19 வயதான கோர்ட்னி ஸ்டோடனின் கணவராக விளங்கியவர் 53 வயதான டக் ஹட்சிஸன் என்பது குறிப்பிடத்தக்கது.

கோர்ட்னிக்கும் அவரின் கணவருக்கும் இடையிலான பாரிய வயது வித்தியாசம் இந்த ஜோடியின் திருமணம் குறித்த சர்ச்சைக்கு காரணமாகியது. அதனால் இவர்களின் திருமண வாழ்க்கையும் விவகாரத்தும் ஊடகங்களினதும் மக்களினதும் கவனத்தை ஈர்த்திருந்தன.


2011 ஆம் ஆண்டு இவர்கள் திருமணம் செய்தபோது, கோர்ட்னிக்கு 16 வயது மாத்திரமே. மணமகனான நடிகர்  டக் ஹட்சிஸன் 51 வயதானவராக இருந்தார்.

தன்னைவிட 35 வயது குறைந்த கோர்ட்னியை 53 வயதான டக் ஹட்சிஸன் திருமணம் செய்தமை “சிறுவர் துஷ்பிரயோகம்” என சிலர் விமர்சித்தனர்.

இத் திருமணத்துக்கு ஆட்சேபம் தெரிவிக்கும் முகமாக தனது முகாமையாளர்கூட தன்னிடமிருந்து பிரிந்து சென்றதாகவும் தனது குடும்பத்தினர் தன்னை ஒதுக்கியதாகவும் நடிகர் ஹட்சிஸன் கூறினார்.

ஆனால், கோர்ட்னி ஸ்டோடனின் தாயாரான கிறிஸ்டா கெல்லர் இத்திருமணத்தை ஆதரித்திருந்தார்.

பல விமர்சனங்களுக்கு மத்தியில் சுமார் இரண்டரை வருடங்கள் தம்பதிகளாக வாழ்ந்த கோர்ட்னியும் ஹட்சிசனும் இப்போது உத்தியோகபூர்வமாக பிரிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


தனக்கு சுதந்திரம் தேவை என்பதால் நடிகர் டக் ஹட்சிஸனிடமிருந்து தான் பிரிந்ததாக கோர்ட்னி தெரிவித்துள்ளார்.

இருவருக்கும் இடையில் என்ன பிரச்சினை இருந்தது என வினவப்பட்டபோது, “எனது வயதுதான் காரணம்  என்றார் 19 வயதான கோர்ட்னி.

பிரிட்டனில் நடைபெற்ற பிக் பிரதர் நிகழ்ச்சியில் தான் பங்குபற்றியபோது டக் ஹட்சிஸனுடனான உறவில் மாற்றம் ஏற்பட்டதாக அவர் கூறினார்.

ஒரு காலத்தில் இவர்கள் இருவரும் உண்மையிலேயே இணைபிரியாத தம்பதிகளாக இருந்தனர்.  பிக் பிரதர் நிகழ்ச்சிக்காக பிரிட்டனுக்கு தான் சென்றபோது முதல் தடவையாக 24 மணித்தியாலங்களுக்கு மேல் டக் ஹட்சிசனை தான் பிரிந்திருக்க நேரிட்டதாக கோர்ட்னி தெரிவித்துள்ளார்.


இப்போது தான் சிறந்த மனோ நிலையில் உள்ளதாகவும் அவர் கூறினார். ஆனால், பரபரப்பு ஏற்படுத்தி பிரபல்யமடைவதற்காக விவகாரத்து செய்யவில்லை எனவும் கண்ணீருடன் அவர் கூறியுள்ளார்.

“நான் டக் ஹட்சிஸனை திருமணம் செய்தபோது, அவர் தனது குடும்பத்தை இழக்க நேரிட்டது. அவரின் முகாமையாளர் அவரை கைவிட்டு விலகிச் சென்றார். அவர் தனது நண்பர்களையும் இழந்தார். நானே அவரின் உலகமாக இருந்தேன். ஆனால், எனது இத்திருமண வாழ்க்கை அதிக அழுத்தங்களை ஏற்படுத்தியது” என்கிறார் கோர்ட்னி ஸ்டோடன்.

இளமைப்பருவத்தில் பாடசாலை கல்வியை இடையில் கைவிட்டு வீட்டிலிருந்தவாறு தொலைவழியில் கல்வி கற்றவர் கோர்ட்னி. பின்னர் ஹொலிவூட் நடிகரான டக் ஹட்சிசனின் நடிப்புப் பயிற்சி வகுப்பில் கோர்ட்னி இணைந்து கொண்டார்.

ஏற்கெனவே திருமணமாகியிருந்த டக் ஹட்சிசனுக்கும் கோர்ட்னிக்கும் காதல் ஆரம்பித்தது. அவ்வேளையில் கோர்ட்னி 16 வயதானவர் என்பதை தான் அறிந்திருக்கவில்லை என பின்னர் ஹட்சிசன் கூறினார்.

பல எதிர்ப்புகளை மீறி இவர்கள் திருமணம் செய்தனர். இரண்டரை வருடங்களின்பின் இப்போது இத்திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது. எனினும் தற்காலிகமாக இருவரும் ஒரே வீட்டில் வெவ்வேறு அறைகளில் தங்கவுள்ளதாக இருவரும் அறிவித்துள்ளனர்.



Post a Comment

Protected by WP Anti Spam