யாழ்ப்பாணத்தில் பிரிட்டிஷ் பிரதமர் கெமரூன்! பின் வாசலில் கூட்டமைப்பு தலைவர் இரா.சம்பந்தன்!!

Read Time:2 Minute, 45 Second

tna.vic-camaranபிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கெமரூனின் யாழ்ப்பாண விஜயத்தின்போது, யாழ்ப்பாணம் பொது நூலகத்திற்கு முன்பாக ‘யுத்த காலத்தில் காணாமல் போனவர்கள்’ என அறிவிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் முற்றுகையிட்டனர். அங்கு பதற்றமான சூழ்நிலை காணப்பட்டது. பிரிட்டிஷ் பிரதமரிடம், காணாமல் போனவர்களை தேடி கண்டுபிடித்து தருமாறு கோரி கோஷம் எழுப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.

இதையடுத்து பொதுமக்களுக்கும் போலீஸூக்கும் இடையே முறுகல் நிலை ஏற்பட்டது.

பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கெமரூனை யாழ்ப்பாணம் பொது நூலகத்தில் சந்தித்துவிட்டு வெளியே வந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழு தலைவர் இரா.சம்பந்தனின் காரை, ‘யுத்த காலத்தில் காணாமல் போனவர்கள்’ என அறிவிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் முற்றுகையிட்டனர்.

வடமாகாண முதல்வர் சி.வி.விக்கினேஸ்வரனுக்கும், பிரிட்டிஷ் பிரதமருக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், மற்றும் கட்சியின் அதியுயர் செல்வாக்குள்ள ஆபிரகாம் சுமந்திரன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

சந்திப்பு முடிந்து சம்பந்தன் வெளியே வந்தபோதே, மக்கள் மத்தியில் சிக்கிக் கொண்டார்.

சம்பந்தனுக்கும் எதிராக கோஷம் எழுப்பிய யாழ்ப்பாண மக்கள், சம்பந்தனின் காருக்கு முன்னால் நின்று ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து பொலிஸார் நூலகத்தின் பின்வாயில் வழியாக சம்பந்தரை பாதுகாப்புடன் அனுப்பி வைத்தனர்.

தமிழ் மக்களிடம் வாக்கு கேட்க வரும்போது முன்வாயில் வழியாக வரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர், முன் வாயிலில் நின்ற தமிழ் மக்களை தவிர்ப்பதற்காக பின்வாயில் வழியாக செல்ல வேண்டிய நிலை, கொஞ்சம் கவலைக்கிடம்தான்!

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 13 வய­தான மகளைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய தந்தை கைது!
Next post மகனை பெட்ரோல் குடிக்கச் செய்து, தீயில் வீசிய தாய்