By 17 November 2013 0 Comments

15 வயது மாணவிமீது 17 வயது மாணவன் துஸ்பிரயோகம்

rape-016பாடசாலை மாணவி ஒருவரை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய மாணவன் ஒருவர் புத்தளம் மாவட்டம் வென்னப்புவ பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் வென்னப்புவ பிரதேச பாடசாலை ஒன்றின் மாணவன் எனவும் இவர் 17 வயதானவர் எனவும் தெரியவந்துள்ளது.

பாதிக்கப்பட்ட மாணவி வென்னப்புவ பிரதேசத்தின் பிறிதொரு பாடசாலையின் மாணவி எனவும் அவர் 15 வயதுடையவர்.

இவர்கள் இருவருக்கும் இடையிலிருந்து காதல் தொடர்பு இருந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில் கடந்த மே மாதம் 24ஆம் திகதி சந்தேகநபரினால் வென்னப்புவ – தும்மலதெனிய கடற்பகுதியில் வைத்து சிறுமி முதற் தடவையாக துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இதன் பின்னதாக தாம் கணவன் – மனைவியாக வாழ்ந்ததாக சிறுமி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

பின்னர் சிறுமியினால் வழங்கப்பட்ட முறைப்பாட்டின் படி சந்தேகநபர் வென்னப்புவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட சிறுமி வைத்திய பரிசோதனைகளுக்காக மாரவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் மாரவில நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.



Post a Comment

Protected by WP Anti Spam