By 17 November 2013 0 Comments

4ஆவது மாடியின் ஜன்னல் கம்பிகளில் சிக்கிய குழந்தை மீட்பு

2994China-13 வயதுக் குழந்தையொன்று 4ஆவது மாடியின் ஜன்னல் கம்பிகளில் வீழ்ந்து கழுத்துப் பகுதி மாட்டிக்கொண்ட நிலையில் மீட்ட சம்பவமொன்று சீனாவில் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் சீனாவின் குஆங்ஸி ஷா ஆங் மாகாணத்தில் கய்லின் நகரில் இடம்பெற்றுள்ளது.

விபத்தில் சிக்கிய சயூ வாங் என்ற குழந்தையின் பெற்றோர் அக்குழந்தையை வீட்டில் தனியாக வைத்துவிட்டு வேலைக்குச் சென்றுள்ளனர். பாதுகாப்பாக வீட்டுக் கதவுகளை அடைத்துவிட்டுச் சென்ற போதிலும் குழந்தை எதிர்பாராத விதமாக வெளியில் வந்து கிரில் கம்பியில் விழுந்துள்ளது.

கழுத்துப் பகுதி சிக்கிய சயூவின் அழுகை சத்தம் கேட்டு மீட்புப் பணிக்காக தீயணைப்புப் படையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் கம்பியை விரித்து குழந்தை மீட்டுள்ளனர்.

நாங்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளை செய்துவிட்டே வேலைக்குச் சென்றோம். இது எதிர்பாராமல் நடந்துள்ளது. அதிர்ஷ்டவசமாக விபரீதம் எதுவும் இடம்பெறவில்லை. இனி குழந்தையை தனியாக விட்டுச்செல்வதில்லை என சயூவின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.



Post a Comment

Protected by WP Anti Spam