31 நாய்களுடன் அமெரிக்க பெண் தற்கொலை

Read Time:3 Minute, 21 Second

dog-01அமெரிக்காவில், விலங்குகள் பாதுகாப்பு அமைப்பை நிறுவி, செல்லப் பிராணிகளுக்கு ஆதரவு அளித்து வந்த பெண், தான் வளர்த்த, 31 நாய்களை கொன்று, தானும் தற்கொலை செய்து கொண்டார்.

அமெரிக்காவின், ஒகாயோ மாகாணத்தைச் சேர்ந்தவர், சான்ரா லேர்டமைன், 62. சிறு வயது முதலே, வீட்டு விலங்குகளை அதிகம் நேசிக்கும் இவர், ஏராளமான நாய்கள் மற்றும் பூனைகளை வளர்த்து வந்தார்.

செல்லப் பிராணிகளை அதிகம் நேசித்த சான்ரா, விலங்குகள் பாதுகாப்பு அமைப்பு ஒன்றை துவங்கி, தெருக்களில் திரியும் நாய்கள் மற்றும் பூனைகளை எடுத்து வளர்த்தார்.

சில நாட்களுக்கு முன் சான்ரா, யாருடைய துணையும் இல்லாமல், அனைத்து பிராணிகளையும் தானே கவனித்துக் கொள்வதை பழக்கப்படுத்திக் கொண்டார். வயது முதிர்வின் காரணமாக, கடந்த சில மாதங்களாக, மன இறுக்கத்தால் பாதிக்கப்பட்ட இவர், தனக்குப் பின் அவர் வளர்த்த பிராணிகளின் நிலை பற்றி கவலை கொள்ளத் துவங்கினார்.

இந்நிலையில், சான்ரா தான் வளர்த்த, 31 நாய்களையும், தன் காரில் ஏற்றி, தானும் விஷம் குடித்து, காரின் கதவுகளை இறுக்க மூடிவிட்டார். விஷத்தின் பாதிப்பால் சான்ரா, காரிலேயே இறந்துவிட்டார்.

காரின் கதவுகள் மூடப்பட்டதால், அதில் அடைக்கப்பட்டிருந்த, 30 நாய்கள் பரிதாபமாக பலியாயின. ஒரே ஒரு நாய் மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது.அதிகாலை, சான்ராவின் வீட்டிற்கு வந்த அவரின் நண்பர், சான்ரா காரில் இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.

போலீசார் காரை சோதனையிட்டதில், சான்ராவின் எழுதிய கடிதம் ஒன்று கிடைத்தது. அதில், தனக்குப் பின், இந்த பிராணிகளை கவனிக்க யாரும் இல்லாததால், தான் வளர்த்த பிராணிகளுடன் தற்கொலை செய்து
கொள்வதாக அதில் எழுதியிருந்தார்.

விலங்குகளுக்கு எதிரான கொடுமைகளை எதிர்த்து குரல் கொடுக்கும் விலங்குகள் பாதுகாப்பு அமைப்பை நிறுவிய சான்ராவின் தற்கொலை, அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இத்தனை ஆண்டுகள், தான் வளர்த்த நாய்களையே சான்ரா கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்டது, வேதனை அளிப்பதாக, அவரின் கணவர் மற்றும் நண்பர்கள் தெரிவித்து உள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post யுவதி துஷ்பிரயோகம்: தோட்ட உதவி அதிகாரி தப்பியோட்டம்
Next post சீன அழகிகள் இலங்கைக்கு விஜயம்