By 19 November 2013 0 Comments

சாரதி தூக்கக் கலக்கம், லொறி கவிழ்ந்தது

1715448219427304087lorry-2சிலாபம் – புத்தளம் வீதியின் ஆராச்சிக்கட்டு, மாதாவேரிய பகுதியில் லொரி ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்தில் வாரியபொல, அவுலேகம பகுதியைச் சேர்ந்த 32 வயதான ஒருவரும், லொரியின் சாரதியாக பணி புரிந்து வந்த, ஆணமடு பகுதியைச் சேர்ந்த 26 வயதான ஒருவருமே காயமடைந்துள்ளனர்.

இன்று அதிகாலை சிலாபத்தில் இருந்து புத்தளம் நோக்கி பயணித்த குறித்த லொரி பாதையவிட்டு விலகி வீதியோரத்தில் இருந்த மரத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் லொரி பாரியளவில் சேதமடைந்துள்ளது. லொரியின் சாரதி தூக்கக்கலக்கத்தில் இருந்ததாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சிலாபம் பொலிஸார் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



Post a Comment

Protected by WP Anti Spam