By 19 November 2013 0 Comments

எஞ்சியுள்ள புலிகளை சாந்தப்படுத்தவே கமரூன் கொழும்பில் அரசியல் விளையாட்டு : கோத்தபாய

ltte.memberபிரித்­தா­னி­யாவில் எஞ்சிப்போயுள்ள புலி­களைச் சாந்­தப்­ப­டுத்­து­வ­தற்கே பிரித்­தா­னிய பிர­தமர் டேவிட் கமரூன் கொழும்பில் தனது அர­சியல் விளை­யாட்டைக் காண்­பித்­துள்­ள­தாக பாது­காப்புச் செய­லாளர் கோத்­த­பாய ராஜ­பக்ஷ குற்றம் சுமத்­தி­யுள்ளார்.

பிரித்­தா­னி­யாவைத் தள­மாகக் கொண்­டி­யங்கி வரும் உல­கத்­த­மிழர் பேரவை மற்றும் பிரித்­தா­னிய தமிழர் பேரவை ஆகி­ய­வற்றின் செல்­வாக்­கிற்­குட்­பட்­ட­தா­கவே கம­ரூனின் நிலைப்­பாடு அமைந்­துள்­ள­தாக கோத்­த­பாய ராஜ­ப­க்ஷவை மேற்­கோள்­காட்டி அர­சாங்க தகவல் திணைக்­களம் தெரி­வித்­துள்­ளது.

பொது நல­வாய அரச தலை­வர்கள் மாநாட்டில் கலந்து கொள்­வ­தற்­கென பிரித்­தா­னிய அரசின் தூதுக்­கு­ழு­வினர் கொழும்­புக்கு வருகை தரு­வ­தற்கு முன்னர் லண்­டனில் செயற்­பட்டு வரும் மூன்று அமைப்­புக்­களின் பிரதி நிதி­க­ளுடன் சந்­திப்­புக்­களை மேற்­கொண்­டி­ருந்­த­தா­கவும் பாது­காப்புச் செயலர் குறிப்­பிட்டார்.

பொறுப்புக் கூறும் விவ­கா­ரங்­களைக் கையாள்­வ­தற்­கான அர்த்­த­புஷ்­டி­யான நட­வ­டிக்­கை­களை ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ எடுக்­கா­து­விடின் அடுத்த வருடம் மார்ச் மாதம் ஜெனீ­வாவில் உள்ள ஐ.நா.மனித உரி­மைகள் பேர­வையில் இலங்கை மீதான சர்­வ­தேச விசா­ர­ணை­யொன்றை நடாத்தக் கோரும் பிரே­ர­ணைக்கு தாங்கள் ஆத­ர­வ­ளிக்கப் போவ­தான கம­ரூனின் எச்­ச­ரிக்கை குறித்து பாது­காப்புச் செயலர் கருத்து வெளி­யி­டு­கையில் ஐ.நா. மனித உரி­மைகள் பேர­வையில் ரஷ்யா சீனா மற்றும் கியூபா போன்ற ஏனைய செல்­வாக்­கு­மிக்க நாடுகள் அங்­கத்­துவம் வகிப்­ப­தனால் அங்கு பிரித்­தா­னி­யா­வினால் தனி வழியே செயற்­பட முடி­யாத நிலையே ஏற்­ப­டு­மெ­னவும் இலங்கை தற்­போதும் தனது ஆளு­மைக்­குட்­பட்ட நாடொன்­றாக இருப்­ப­தா­கவே பிரித்­தா­னியா தப்­புக்­க­ணக்கு போட்டு வரு­வ­தா­கவும் குறிப்­பிட்டார்.

சிறு­ப­ராய தமிழ்ச் சிறு­மி­களை பயங்­க­ர­வா­திகள் தங்­க­ளுக்­கென ஆட்­சேர்ப்புச் செய்­தி­ருந்த தமி­ழீழ விடு­தலைப் புலி­களின் பேச்­சாளர் அன்டன் பால­சிங்­கத்தின் மனைவி அடேல் உள்­ளிட்ட தமி­ழீழ விடு­தலை புலி­களின் முன்னாள் உறுப்­பி­னர்­களே இலங்­கையில் இழைக்­கப்­பட்­டி­ருந்த அட்­டூ­ழி­யங்­க­ளுக்குப் பொறுப்­பா­ளி­க­ளாக விளங்­கி­ய­துடன் அவர்கள் தற்­போது ஐக்­கிய இராச்­சி­யத்தில் பிரித்­தா­னிய அரசின் ஆசீர்­வா­தத்­துடன் தமது அர­சியல் நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்து வரு­கின்­ற­ரெ­னவும் தெரி­வித்த அவர் பிரித்­தா­னிய அர­சியல் ஸ்தாபனத்தின் ஒரு பிரிவினர் எஞ்சியுள்ள தமிழீழ விடுதலைப் புலிகளுடன் நெருக்கமான உறவைப் பேணி வருவதுடன் தொழிற்கட்சியின் முன்னாள் அமைச்சர் ஜோன் ரையான் உலகத் தமிழர் பேரவையின் கொள்கை ஆலோசகராக செயற்பட்டு வருவதாகவும் மேலும் குறிப்பிட்டுள்ளார்.Post a Comment

Protected by WP Anti Spam