இளம்பெண் பெற்றெடுத்த 6 கிலோ எடை குழந்தை

Read Time:1 Minute, 50 Second

013சீனாவில் ஷாங்காய் பகுதியை சேர்ந்த 27 வயது இளம்பெண் சில தினங்களுக்கு முன் அழகான குழந்தையை பெற்றெடுத்தார்.

அந்த குழந்தை 6.17 கிலோ எடை இருக்கிறது. இது சீனாவில் பிறந்த அதிக எடையுள்ள குழந்தைகளில் ஒன்றாக கருதப்படுகிறது.

தாயும், சேயும் நல்ல உடல்நலத்துடன் இருப்பதாக டாக்டர்கள் கூறினர். என்றாலும் அதிக குண்டு உடலுடன் இருப்பதால் எதிர்காலத்தில் குழந்தையின் உடல்நிலை பாதிக்கும் அபாயம் இருப்பதாக மருத்துவ வல்லுனர்கள் கூறுகின்றனர்.

இந்த குழந்தையின் தாய் கூறுகையில், ‘பொதுவாக சீன கர்ப்பிணிகள் மீன், கோழி, புறா இறைச்சியை அதிகம் சாப்பிடுவார்கள். ஆனால் நான் கர்ப்பிணியாக இருந்த போது பால், முட்டை மற்றும் பழங்களையே அதிக அளவில் சாப்பிட்டேன்’ என்கிறார்.

சீனாவில் ஹூயன் மாகாணத்தில் கடந்த 2012–ம் ஆண்டில் ஒரு பெண் 7.04 கிலோ எடையில் குழந்தை பெற்றார். அதுவே சீனாவில் பிறந்த குண்டு குழந்தை என்ற சாதனையை தக்கவைத்துக் கொண்டிருக்கிறது.

உலக அளவில் சாதனைபுரிந்த குண்டு குழந்தை 10½ கிலோ எடையில் கனடாவில் 1879–ல் பிறந்தது. அதன் தாய் பெயர் அன்னா. ஆனால் அந்த குழந்தை 11 மணி நேரத்திற்கு பிறகு இறந்து விட்டது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நாய்க்குட்டியை பையில் அடைத்த எஜமானிக்கு சிக்கல்
Next post மதுபோதையில் வந்து மனைவி, பிள்ளைகளை துன்புறுத்தியவருக்கு விசித்திரமான தண்டனை