குழந்தை கற்பழிப்பு காட்சியை நடித்து காட்டுங்கள்: பள்ளித்தேர்வு கேள்வியால் தென் ஆப்பிரிக்காவில் அதிர்ச்சி

Read Time:2 Minute, 56 Second

sexதென்னாப்பிரிக்காவில் சமீபத்தில் நடைபெற்ற உயர்நிலைப் பள்ளித் தேர்வு ஒன்றில் நாடகப்பிரிவு மாணவர்களுக்குக் கேட்கப்பட்டிருந்த கேள்வியைக் கண்டு மாணவர்கள் உட்பட அவர்களின் பெற்றோர்களும் அதிர்ந்து போனார்கள்.

ஒன்பது மாதக் குழந்தை மீது நடைபெறும் கற்பழிப்புத் தாக்குதலை அந்த மாணவர்கள் மேடை நாடகமாக நடித்துக் காட்டவேண்டும் என்பதே கேள்வியாகும்.

இதற்கு அவர்களுக்கு ரொட்டித் துண்டு, துடைப்பமும் குறியீடுகளாக அளிக்கப்பட்டிருந்தன.

இவற்றைப் பயன்படுத்தி அந்த மாணவர்கள் கற்பழிப்புக் காட்சியினை விளக்கவேண்டும் என்று கேள்வித்தாளில் குறிப்பிடப்பட்டிருந்தது.

பார்ப்பவர்களுக்கு அதன் பயங்கரம் வெளிப்படும் வண்ணம் கொடூரமாக அந்த செயலை நடித்துக்காட்ட வேண்டும் என்றும் மாணவர்கள் கேட்கப்பட்டிருந்தனர்.

கடந்த 2001 ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்காவில் ஒன்பது மாத குழந்தை ஒன்றிற்கு நடைபெற்ற கொடூரமான கற்பழிப்பு நிகழ்ச்சி உலகெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த சம்பவத்தை அடிப்படையாக வைத்து லாரா ஃபூட் நியூட்டன் என்பவரால் எழுதப்பட்ட ‘ஷெபங்’ என்ற நாடகம் விருதினையும் பெற்றது.

இந்த நாடகத்தின் சாராம்சத்திலிருந்தே தற்போது நடைபெற்ற தேர்வுக்கான கேள்வி தயாரிக்கப்பட்டதாக ஆசிரியர் குழு தெரிவித்தது.

எனினும், நான்கு நிமிடங்களுக்கு ஒருமுறை யாரேனும் பாலியல் துன்பத்திற்குத் தள்ளப்படுகின்ற நிலையில் உள்ள அந்த நாட்டில் இந்தக் கேள்வி அனைவரிடத்திலும் அதிர்ச்சியைத் தோற்றுவித்தது. மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் போன்றோர்.

இந்தக் கேள்வியை அர்த்தமற்றது என்று விமர்சித்தனர். மாணவர்களில் சிலர்கூட இதுபோன்ற துன்பத்திற்கு ஆளாகியிருக்கக்கூடும் என்று கூறப்பட்டது.

மாணவர்களில் ஒருவர் தன்னை இந்தக் கேள்வி மிகவும் பாதிப்புக்குள்ளாக்கியது என்று கூறியதும் வெளிவந்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நாளை வெளியாகும் அஜித்தின் ‘பில்லா 3’
Next post மாணவியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய பிரதி அதிபருக்கு விளக்கமறியல்