மாட்டு வண்டியுடன், குளத்தில் விழுந்த நடிகர்கள்..

Read Time:1 Minute, 27 Second

015படப்பிடிப்பின் போது மாட்டு வண்டியில் கட்டிப்பட்டிருந்த மாடு குழம்பி குளத்துக்குள் பாய்ந்த சம்பவமொன்று சீகிரிய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

வண்டியில் பயணித்துக்கொண்டிருந்த வண்டிக்காரர் உட்பட மூவரும் குளத்தில் விழுந்த நிலையில், படக்குழுவினர் அவர்களைக் காப்பாற்றியுள்ளனர்.

பாடலொன்றுக்கான காட்சியை படம்பிடிப்பதற்காக மாட்டு வண்டியொன்று ஏற்பாடு செய்யப்பட்டு சிகிரிய வேகந்த என்ற மலைப் பகுதிக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

படப்பிடிப்புக்காக வண்டியில் இருவரை ஏற்றிக்கொண்டு வண்டிக்காரர் வண்டியை மலை நோக்கி செலுத்திக்கொண்டிருந்த போது வண்டியில் பூட்டப்பட்டிருந்த மாடு குழம்பியதில் வண்டி, குளத்துக்குள் உருண்டு விழுந்துள்ளது.

பின்னர், குளத்தில் விழுந்த மூவரையும் மாட்டையும் படப்பிடிப்புக் குழுவினர் காப்பாற்றி கரையேற்றியுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சிம்புவின் அடுத்த குறி சமந்தா
Next post (VIDEO) “பண்ணையாரும் பத்மினியும்” – அதிகாரபூர்வ ட்ரெய்லர்…