துனிசியாவுடன் நாளை மோதல்: ஸ்பெயின் அணிக்கு 2-வது வெற்றி வாய்ப்பு

Read Time:2 Minute, 10 Second

spain.Flag.jpg18-வது உலக கோப்பை கால்பந்து போட்டி ஜெர்மனியில் கடந்த 9-ந் தேதி தொடங் கியது. இதுவரை `ஏ-1′ பிரிவில் ஜெர்மனி, ஈக்வடார், `பி’ பிரிவில் இங்கிலாந்து, `சி’ பிரிவில் அர்ஜென்டினா, ஆலந்து, `டி’ பிரிவில் போர்ச்சுக்கல் ஆகிய நாடுகள் 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றன. இன்று நடைபெறும் ஆட்டங்களில் ஜப்பான் -குரோஷியா, பிரேசில் -ஆஸ்திரேலியா `எப்’ பிரிவு’ பிரான்ஸ் -தென் கொரியா அணிகள் மோதுகின்றன. நாளை நடைபெறும் ஆட்டத்தில் `எச்’ பிரிவில் உள்ள ஸ்பெயின்- துனிசியா அணிகள் மோதுகின்றன. ஸ்பெயின் அணி தொடக்க ஆட்டத்தில் 4-0 என்ற கணக்கில் உக்ரைனை வென்று இருந்தது. துனிசியா 2-2 என்ற கணக்கில் சவுதி அரேபியாவுடன் `டிரா’ செய்தது.

பலம் வாய்ந்த ஸ்பெயின் அணி நாளைய ஆட்டத்தில் எளிதில் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் 2-வது சுற்றுக்கு தகுதி பெறும். இதே பிரிவில் நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் சவுதி அரேபியா – உக்ரைன் அணிகள் மோதுகின்றன. இந்திய நேரப்படி இரவு 9-30 மணிக்கு இந்த ஆட்டம் நடக்கிறது.

முன்னதாக `ஜி’ பிரிவில் நடைபெறும் ஆட்டத்தில் சுவிட்சர்லாந்து -டோகோ அணிகள் மோதுகின்றன. சுவிட்சர்லாந்து தொடக்க ஆட்டத்தில் கோல் எதுவுமின்றி பிரான்சுடன் `டிரா’ செய்தது. டோகோ 1-2 என்ற கணக்கில் தென் கொரியாவிடம் தோற்றது. இந்த ஆட்டத்தில் சுவிட்சர்லாந்து வெற்றி பெறும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post நேபாள இடைக்கால அரசில் சேர `மாவோயிஸ்டு’கள் சம்மதம்
Next post கொழும்பில் மனித வெடிகுண்டு தாக்குதல் பீதி!