இலங்கையில் 1808 பேருக்கு எயிட்ஸ்: இதுவரை 337 பேர் பலி

Read Time:1 Minute, 47 Second

AIDS3கடந்த மூன்று மாதங்களில் இலங்கையில் 69 எயிட்ஸ் நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் 159 பேருக்கு எயிட்ஸ் நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

5 ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதன் பின் இவ்விடயம் உறுதியானதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கையில் தற்போது 1808 எயிட்ஸ் நோயாளர்கள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

இதில் தாயிடம் இருந்து எயிட்ஸ் தொற்றுக்கு உள்ளான 70 பேரும் அடங்குகின்றனர்.

இலங்கையில் முதல் முறையாக 1989ம் ஆண்டே எயிட்ஸ் நோயாளர் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் இதுவரை எயிட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டு 337 பேர் உயிரிழந்துள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

எயிட்ஸ் தொற்றுள்ளவர்களில் 60 சதவீதமானவர்கள் மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்களாவர். அதில் 52 வீதமானவர்கள் கொழும்பு மாவட்டத்தில் உள்ளனர்.

பாதுகாப்பற்ற பாலியல் உறவுகளால் 95 சதவீதமானவர்களுக்கும் தாயின் ஊடாக 4 சதவீதமானவர்களுக்கும் எயிட்ஸ் நோய் தொற்றியுள்ளதாக சுகாதார அமைச்சு கண்டுபிடித்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post போதையில் வீதியில் கிடந்த நபரை விழுங்கிய மலைப்பாம்பு: இணையத்தில் காட்டுத்தீயாக பரவிய செய்தி
Next post இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக்குக்கு, ஸ்குவாஷ் வீராங்கனை தீபிகாவுடன் நிச்சயதார்த்தம்