(VIDEO) இலங்கையில் நடந்த யுத்தத்தின் ‘இறுத்திக்கட்டம்’ ஆவணப்படம்..!

Read Time:2 Minute, 49 Second

slk.army-ltteஇலங்கையில் நடந்த யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஒரு முன்னாள் பெண் உறுப்பினர் வாழ்வை விளக்கும் ‘இறுத்திக்கட்டம்’ ஆவணப்படம் பிரஸ்ஸலிலுள்ள ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தில் முதல் தடவையாக திரையிடப்பட்டது.

ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றிலுள்ள இலங்கை நண்பர்கள் குழுவின் தலைவரான ஜொப்ரேவான் ஓடன் இந்த நிகழ்வை ஒழுங்கு செய்திருந்தார்.

இந்த ஆவணப்படத்தை பார்த்தவர்களில்இ இலங்கையின் பெல்ஜியம் லக்ஷம்பேர்க் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றுக்கான தூதுவரான பி.எம்.அம்ஸாஇ இலங்கையில் 11 வருடங்கள் வாழ்ந்த பிரித்தானிய பிரசையான றிச்சாட் மன்டிஇ ஆகியோரும் அடங்குவர்.

இந்த படத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளினால் ஆயிரக்கணக்கான தமிழ் மக்களுக்கு உண்டான அவலங்கள் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இராணுவத்தினர் வழங்கிய இரக்கமான அன்பான கவனிப்புகள் சித்திரிக்கப்பட்டுள்ளன.

தமிழீழ விடுதலைப் புலிகளினால் நடத்தப்பட்ட செஞ்சோலையில் வளர்ந்த தமிழீழ விடுதலைப் புலி பெண் உறுப்பினர் ஒருவரை மையமாக கொண்டே இந்த ஆவணப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. ஜெயவதனி எனும் இப்பெண் மறுபக்கத்தை தீயதாகவே பார்க்கும் வகையில் வளர்க்கப்பட்டவர்.

இந்த படம் ஜெயவதனி பற்றியதாயினும் இது தனி ஒருவரின் வாழ்க்கை சரித்திரத்துக்கும் அப்பால் செல்கின்றது. இதில் இவரைப்போன்ற பலரின் கதி காட்டப்பட்டுள்ளது. இது மீட்சிபெற முயலும் இலங்கையிலுள்ள மக்களின் கதையாகும்.

இவர்களுக்கு ஆழமான அனுதாபமும் உதவியும் தேவை இதனால்தான் இந்த படத்தை தயாரித்தேன் என இந்த படத்தின் இயக்குநர் ஜீவன் சந்திமல் கூறினார்.

இந்த படத்தை பார்த்தவர்கள், ஒரு நீதியான சமநிலைப்பட்ட ஊடக கவனிப்பு என்ற நேக்கில் இந்தப் படத்தை இயன்றளவு பல இடங்களிலும் திரையிட வேண்டுமெனும் கருத்தை வெளியிட்டனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் குடும்பம் இலங்கை கணிப்பீட்டில் இல்லை!
Next post “முக்குலத்தோர் புலிப்படை” அமைப்பை கலைக்க கோரி, நடிகர் கருணாஸ் வீட்டை முற்றுகையிட முயன்ற 30 பேர் கைது