By 1 December 2013 0 Comments

சிறிதரன் எம்.பியின் புலிப்பாசமா? பொய்ப்பாசமா?? -வடபுலத்தான்

tna.sritharanபுலி இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன் என்று தெரிந்தவர்கள் இருக்கிறார்கள்.. அதில் ஒருவர் “சிறிதரன் எம்.பி”.

பிரபாகரனையும், புலிகளையும் வைத்து தன்னுடைய அரசியல் ஆதாயங்களைப் பெறுவதில் “சிறிதரன்” மகா கெட்டிக்காரராக இருக்கிறார்.

இதற்காக அவர் தமிழ் வின், லங்கா சிறி, ஜே.வி.பி நியுஸ் என நான்கைந்து இணையத்தளங்களை வைத்திருக்கிறார்.

(இதென்ன?, இந்தப் பெயருக்கும் தமிழீழத்துக்கும், தமிழுக்கும் என்ன சம்மந்தம்? என்று நீங்கள் கேட்கலாம். அதெல்லாம் பெறுமதியில்லாத கேள்விகள்.. அதைத் தூக்கிக் குப்பைக் கூடைக்குள் போட்டுக் கொள்ளுங்கள்)

தமிழ்நாட்டுக்கும், புலம்பெயர் மக்கள் வாழும் இடங்களுக்கும் போகும் போதெல்லாம் அங்கே “புலிப்புராணம்” பாடுகிறார் “சிறிதரன்”.

உள்ளுரில் தன்னுடைய ஆதரவாளர்களையும், தொண்டர்களையும் சந்திக்கும் போதும் புலிப்புராணம் தான்.

போதாக்குறைக்கு பாராளுமன்றத்திலே பிரபாகரனை வாழ்த்தியும், புலிகளைப் போற்றியும் காவியம் பாடத் தொடங்கியிருக்கிறார்..

ஏறக்குறைய இது “இரண்டாவது தேசியத்தலைவர்” அந்தஸ்த்துக்குத் தன்னை உயர்த்தும் ஒரு கனவு.  இதற்கான அத்திவாரத்தை அவர் மெல்ல, மெல்லப் பலப்படுத்தியும் கொண்டிருக்கிறார்.

சிறிதரன் அதிரடியாக எடுக்கின்ற முடிவுகளுக்கும், விடுகின்ற அறிவிப்புகளுக்கும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களே சிலவேளை பயப்படுகிறார்கள்..

அண்மையில் வடமாகாணசபைக்கான அமைச்சர்கள் தெரிவின் போது சிறிதரனே பல விசயங்களையும் தீர்மானத்திருக்கிறார்..

PLOTE சித்தார்த்தனைச் சபையின் தவிசாளராக நியமிப்போம் எனச் சிலர் கருத்துத் தெரிவித்த போது, அதை எதிர்த்து முறியடித்தது சிறிதரனே!

EPRLF சுரேஸ் பிரேமச்சந்திரனின் சசோதரருக்கு அமைச்சுப் பதவி கொடுக்க வேண்டாம் என்றும், ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை எந்த நிலையிலும் முதன்மைப்படுத்த விடமாட்டேன் என்றும் சொன்னவர் சிறிதரன்!!

இப்படி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும், தமிழ்நாட்டு தமிழ்த் தேசியவாதிகளையும் புலம்பெயர் புலி விசுவாசிகளையும் தன்னுடைய “கைக்குள்ளும், பொக்கற்றுக்குள்ளும், காலுக்குள்ளும்” வசதிக்குத் தக்கபடி போட்டுக் கொள்கிறார் சிறிதரன்.

ஆனால், “சிங்கன்” சிறிதரன், புலிகள் இருந்த போது அந்த அமைப்பில் சேர்ந்து போராளியாகித் தன்னைத் தியாகம் செய்யத் தயாராகவில்லை.

அவருடைய வயதை ஒத்த ‘போர்க்’ என்ற போராளி கரும்புலியாக மாங்குளத்தில் வெடித்துச் சிதறிய போது, தன்னுடைய கையில் இருந்த துவக்கைத் தூக்கியெறிந்து விட்டுத் தப்பியோடியவர் இந்தப் புதுமைப் போராளி!

இயக்கத்தில் சேர்ந்து ஆறே ஆறுமாதங்களில் இயக்க வாழ்க்கைக்கும், போராட்டத்திற்கும் முழுக்குப்போட்டு விட்டுத் தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையை உருவாக்கத் தொடங்கினார் “ஐயா” சிறிதரன். (இதற்குப் புலிகள் கொடுத்த பணிஸ்மென்ற்றை மறந்திருக்க மாட்டார் என்பது வேறு கதை).

பிறகு, ஆசிரியப் பணிக்குச் சென்ற போதும், வேலை செய்த இடங்களில் எல்லாம் எப்பவும் பிரச்சினையும் தொல்லையும் தான்..

“சாதியை மோந்து பாக்கிறதில்” இருந்து, “சண்டித்தனம்” செய்கிறது வரை “ஆளின்” (சிறிதரன்) வேலைகள் அவரொத்த வயதுடையோருக்கு வன்னியில் பகிரங்கம்.

இவருடைய சேட்டைகளைக் கண்டிக்க முற்பட்ட பாடசாலை அதிபரை (பின்னாளில் இந்த அதிபர் ஒரு அதிகாரியாக பணியாற்றினார்) ஒருவரை ஆள்வைத்து அடிப்பித்தார் “சிங்கன்” சிறிதரன்.

இதற்காகப் புலிகள் இவரைச் சிறையிலேயே தூக்கிப் போட்டார்கள். போட்டது யாருமல்ல, புலிகளின் முக்கியஸ்தர்களில் ஒருவரும், உறவினர்களில் ஒருவருமாகிய “விநாயகம்” என்பவர்.

இப்படியே இருந்தவர் புலிகள் களத்தில் இருந்து நீங்கிய பிறகே அரசியலில் குதித்தார். – குதிக்கக் கூடியதாக இருந்தது. (புலிகள் இருந்திருந்தால் இப்ப சிறிதரன் ஏதோ ஒரு கிராமத்துப் பள்ளியில் அதிபராகவோ ஆசிரியராகவோ தான் இருந்திருப்பார்).

புலிகள் இருந்த காலத்தில் சிறிதரனை பல பாடசாலைகளுக்கு இடம்மாற்றிக் கொண்டேயிருந்தார்கள். ஒரு சந்தர்ப்பத்தில் கூட சிறிதரன் எந்த அரசியல் மேடையிலும் அமர்த்தப்பட்டவரும் இல்லை. அங்கீகரிக்கப்பட்டவரும் இல்லை.

இவ்வளவுக்கும் புலிகளின் தளபதிகளில் ஒருவராக இருந்த “தீபனின்” சகோதரியைத் திருமணம் செய்ததால் வந்த தொடர்பைச் சொல்லிச் சிலரிடம் சில காரியங்களைப் பார்த்தார்.

ஆனால் தீபனோ, சிறிதரனை மதித்ததும் கிடையாது. சிறிதரனுடன் கதைத்ததும் கிடையாது.

இது மட்டுமா?

போர் கொஞ்சம் தீவிரமடையத் தொடங்கிய போது, “சிங்கன்” சிறிதரன் செஞ்சிலுவைச் சங்க வாகனத்தில் தொத்தித் தப்பினார்.

ஐயா, தான் பொறுப்பு வகித்த பாடசாலையை விட்டும், நிறைமாதக் கர்ப்பிணியான தன்னுடைய மனைவியை விட்டும் தப்பியோடினார்.

போனவர் வவுனியாவிலும் கொழும்பிலும் என்று மாறி, மாறி நின்றார்..

வன்னியில் உக்கிரமாகப் போர் நடந்து கொண்டிருந்த போது, இப்பொழுது குற்றம் சாட்டுகிற மகிந்த ராஜபக்ஷ அரசின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் இந்தத் தீவிரவாதி அச்சமின்றி நின்றார்.

இரவில் தண்ணிப் பாட்டிகள் வவுனியாவில் இருக்கும் ஒரு ஆசிரியரின் வீட்டிலும், இன்னொரு அரச விடுதியிலும் நடந்தன.

இப்படியெல்லாம் கூத்தடித்தவருக்கே இப்ப புலிப்பாசம் பொங்கியிருக்கிறது?!.

பிரபாகரனைப் பற்றியும், புலிகளைப் பற்றியும், மாவீரர்களைப் பற்றியும் பேசி தன்னை வளப்படுத்துகிறார்.

இளிச்சவாயர்கள் இருக்கும் வரை ஏமாற்றுவோனுக்குக் கொண்டாட்டம் தான்.

உண்மை தெரிந்தவர்கள் சிறிதரனைக் கோவிக்கவில்லை. அவரைக் கோவித்துப் பிரயோசனமும் இல்லை. “அவர் ஒரு அசல் வியாபாரி”யான பிறகு அவரிடம் நீதி, நியாயம் அறத்தை எல்லாம் எதிர்பார்க்க முடியாது.

படித்தவர்களாகவும், நாலு விசயம் தெரிந்தவர்களாகவும் இருக்கும் ஏமாளிகளையிட்டே நாம் கவலைப்படுகிறோம்.

இவர்கள்தான் தாங்களும் கெட்டு, பிறரையும் கெடுத்துக் கொள்கிறார்கள்…!!!Post a Comment

Protected by WP Anti Spam