றெக்சியன் கொலைக்குப் பின்னால், EPDP உட்கட்சி முரண்பாடாம்?!

Read Time:2 Minute, 56 Second

epdp.logoநெடுந்தீவு பிரதேச சபையின் பிரதேச சபை தவிசாளர் றெக்சியன் படுகொலைக்கு பின்னால் EPDP உட்கட்சி முரண்பாடும், பெண் பிரச்சினையுமே காரணம் என பரவலாக நெடுந்தீவு மக்களினால் தெரிவிக்கப்படுகின்றது. கடந்த இரண்டு மாதங்களாக நெடுந்தீவு பிரதேச சபையின் நடவடிக்கைகளை உட்கட்சி முரண்பாடுகள் காரணமாக பகிஸ்கரித்து வந்த நிலையில் தற்போது துப்பாக்கியால் சுடப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

இவருடைய கொலையின் பின்னால் ஈ.பி.டி.பியின் முக்கிய உறுப்பினர்கள் இருப்பதாகவும் இதன் காரணத்தினால் தான் கட்சியின் பொதுச் செயலாளரும், அமைச்சருமான கே.என்.டக்ளஸ் தேவானந்த எந்த ஒரு அறிக்கையையும் வழமை போன்று விடுத்து நியாம் கற்பிக்க முடியாத நிலையில் திண்டாடுவதாகவும் கட்சியின் உறுப்பினர்களும் பொது மக்களும் தெரிவிக்கின்றார்கள்.

இத்தகைய சம்பவம் ஒன்று ஏற்னவே நெடுந்தீவு பிரதேசத்தின் உதவி அரசாங்க அதிபராக இருந்த ஒருவர், ஈ.பி.டி.பி உறுப்பினர்களினால் காசோலையொன்றுக்கு கையொப்பம் இட்டு தரும்படி கூறியவேளையில் இதற்கு அவர் சம்மதம் தொவிக்காத நிலையில் அடித்து படுகொலை செய்யப்பட்டிருந்தார்.

அதனைத் தொடர்ந்து அந்த கொலையை மூடி மறைத்துவிட அமைதியாக இருந்த வேளையில், கட்சியில் இருந்து பிரிந்து சென்ற இரமேஜ்வரன், இராமேஸ்வரன் சகோதரர்கள் குறிப்பிட்ட உதவி அரசாங்க அதிபர் எவ்வாறு கொல்லப்பட்டார்? எதற்க்காக கொல்லப்பட்டார்? என்ற விபரங்களை வெயிட்டதும், அதனைத் தொடர்ந்து அதற்கு ஈ.பி.டி.பி நியாம் கற்பிக்க முயன்றமையும் இந்த இடத்தில் சுட்டிக்காட்டக் கூடியதாகும்.

இந்த வகையில் தாற்போதும்கூட நெடுந்தீவு பிரதேசசபையின் தவிசாளர் கொல்லப்பட்டுள்ளமையும், இதனால் கட்சி இரண்டு பிளவாக பிளந்துள்ளமை காரணமாக செயலாளர் எதனையும் கூற முடியாத நிலையில் வாய்மூடி மௌனியாக இருப்பதாகவும் ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மாவீரர் தின அனுஸ்டிப்பு: தமிழக முகாமில் எழுவர் கைது 33 பேர் உண்ணாவிரதம்
Next post சிறிதரன் எம்.பியின் புலிப்பாசமா? பொய்ப்பாசமா?? -வடபுலத்தான்