ரகுராம் உடல் தகனம்: உடலுக்கு ரஜினிகாந்த் அஞ்சலி

Read Time:2 Minute, 33 Second

ind.rajiniநடன இயக்குனர் ரகுராம் உடல் நேற்று தகனம் செய்யப்பட்டது. அவரது உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட ஏராளமானோர் நடிகர் நடிகைகள் அஞ்சலி செலுத்தினார்கள்.

பிரபல டான்ஸ்மாஸ்டர் ரகுராம். இவர் எம்.ஜி.ஆர்._ சிவாஜி காலத்தில் தொடங்கி ரஜினி_ கமல் வரை 1000_க்கும் மேற்பட்ட படங்களுக்கு டான்ஸ் மாஸ்டராக பணி புரிந்துள்ளார்.

சென்னை காம்தர் நகரில் குடும்பத்துடன் வசித்து வந்தார். நேற்று காலை 11.30 மணியளவில் ரகுராம் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார்.

அவருக்கு வயது 64. மரணம் அடைந்த ரகுராமுக்கு கிரிஜா என்ற மனைவியும், சுஜாதா, காயத்ரி ஆகிய மகள்களும் உள்ளனர்.

இதில் சுஜாதா பரதநாட்டிய கலைஞர் ஆவார். காயத்ரி பல படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். ரகுராமின் மனைவி கிரிஜா பிரபல டான்ஸ் மாஸ்டர் கலாவின் அக்காள் ஆவார்.

ரகுராமின் உடல் திரையுலக பிரமுகர்கள் அஞ்சலி செலுத்துவதற்காக அவரது வீட்டில் வைக்கப்பட்டிருந்தது. நடிகர் ரஜினிகாந்த் நேற்று ரகுராம் வீட்டுக்கு சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

நடிகர்கள் விவேக், மனோபாலா சின்னஜெயந்தி, எடிட்டர் மோகன், நடிகைகள் ராதிகா சரத்குமார், நமீதா ஆகியோர் அஞ்சலி செலுத்தினார்கள்.

ரகுராம் உடலுக்கு இன்று நடிகர் சங்க பொதுச்செயலாளர் ராதாரவி, நடிகர்கள் சிவகுமார், மன்சூர்அலிகான், சந்தான பாரதி, பாண்டு, நடிகைகள் லிசி, சொர்ண மால்யா, பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், டைரக்டர்கள் கே.எஸ். ரவிக்குமார், பிரியதர்ஷன், தயாரிப்பாளர்கள் எச்.முரளி, பி.சிவா, முரளிதரன் மற்றும் போர்பிரேம் கல்யாணம் ஆகியோர் அஞ்சலி செலுத்தினார்கள்.

ரகுராமின் இறுதிச் சடங்கு நேற்று பிற்பகலில் நடந்தது. பின்னர் கண்ணம்மாபேட்டை மயானத்தில் உடல் தகனம் செய்யப்பட்டது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நீண்ட நாள் விடுமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து, யாழ். பல்கலை மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
Next post (PHOTOS & VIDEO) வரவு – செலவுத் திட்டத்திற்கு எதிராக, கோவணத்துடன் ஆர்ப்பாட்டம்!!