நாவிதன்வெளி பி.ச. உப தவிசாளர் கூட்டமைப்பிலிருந்து இடைநிறுத்தம்

Read Time:3 Minute, 23 Second

TNA_logoநாவிதன்வெளி பிரதேச சபையின் உப தவிசாளர் அமரதாச ஆனந்தன் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் பொறுப்பில் 22.11.2013 திகதியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

இதேவேளை அமரதாச ஆனந்தன் மீது கட்சியினால் ஒழுக்கக்காற்று நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளதாக கடிதம் ஒன்றை நாவிதன் வெளி பிரதேச சபை தவிசாளருக்கு கட்சியின் பொதுச் செயலாளர் மாவை.எஸ்.சேனாதிராஜா அனுப்பி வைத்துள்ளார்.

கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கடந்த 2011-3-17 ல் நடைபெற்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் நாவிதன் வெளி பிரதேச சபைக்கான இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வேட்பாளர் பட்டியலில் அமரதாச ஆனந்தன் கையெழுத்திட்டுத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்று நாவிதன்வெளி பிரதேசசபையின் ஆட்சிநிர்வாகப் பொறுப்பை ஏற்ற போழுது உப தவிசாளராக நியமிக்கப்பட்டார்.

ஆனாலும் அதன்பின் எமது கட்சியினாலும் தமிழ் தேசிய கூட்டமைப்பினாலும் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் மற்றும் அதன்பின் நடைபெற்ற தேர்தல் காலங்களிலும் எமது நடவடிக்கைகளில் தாங்கள் தன்னிச்சையாகவே செயட்பட்டு வந்துள்ளீர்கள் என்பதை நேரில் அவதானித்திருக்கின்றோம்.

ஆத்தகைய நடவடிக்கைகள் பற்றி அவ்வப்போது எமக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

அதேவேளை நாவிதன் வெளி பிரதேச சபையில் 2014ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை தோற்கடிக்கும் நோக்கில் உறுப்பினர்களிடம் எதிரணி உறுப்பினர்களிடம் ஆதரவு திரட்டுவதில் ஈடுபட்டு வருவது தங்கள் மீது ஒழுக்கக்காற்று நடவடிக்கை எடுக்கப்படுவதற்கே இட்டுச் செல்லும்.

ஓட்டு மொத்தமாக நாவிதன் வெளி பிரதேச சபையின் சுமூகமான நடவடிக்கைகளுக்கு எதிராகவும் இலங்கைத் தமிழரசுக் கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு விரேதமாகவும் செயற்பட்டு வரும் தங்களை 22.11.2013 முதல் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் எனும் பொறுப்பில் இருந்து இடை நிறுத்தப்படுகிறீர்கள் என இத்தால் அறியத் தருகின்றதுடன் இந்த நடவடிக்கை தொட்சியாக எமது கட்சியினால் ஒழுங்கு நடவடிக்கைக்குழு நியமிக்கப்பட்டு விசாரணை நடத்தப்படுவதற்கான நடவடிக்கையும் எடுக்கப்படும் என கட்சியின் பொதுச் செயலாளர் மாவை.எஸ்.சேனாதிராஜா கையப்பமிட்டு கடிதம் அனுப்பி வைத்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சொகுசு வாகனத்தில் வந்து புறாக்களை திருடிய நபர்
Next post தன்னை கொன்று உண்ண அனுமதித்த நபர்: குத்திக்கொலை செய்து உண்ட நபர் கைது