உலகின் மிக உயரமான கட்டடத்தின் உச்சியில் அமர்ந்து தேசிய கொடியை அசைத்த எமிரேட்ஸ் முடிக்குரிய இளவரசர்

Read Time:2 Minute, 51 Second

3205Dubai-1வேர்ல்ட் எக்ஸ்போ 2020 எனப்படும் உலக வர்த்த கண்காட்சி இடம்பெறும் நாடாக ஐக்கிய அரபு இராச்சியம் தெரிவானது.

இதனை கொண்டாடும் வகையில் எமிரேட்ஸின் முடிக்குரிய இளவரசர் எச்.எச். ஷெய்க் ஹம்டன் பின் மொஹமட் பின் றஷீட் அல் மக்டோம் உலகின் மிக உயர்ந்த கட்டடமான பேர்ஜ் கலிபாவின் உச்சியில் அமர்ந்து கொடியசைக்கும் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

வேர்ல்ட் எக்ஸ்போ 2020 இனை நடத்துவதற்கான நாட்டினைத் தெரிவு செய்யும் இறுதி வாக்களிப்பு நடைபெற்ற வேளையில் இந்த வீடியோ படம்பிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த வீடியோவில் 31 வயதான இளவரசர் எச்.எச். ஹம்டன் 160 தட்டுக்களைக் கொண்ட கட்டிடத்தின் உச்சியில் 2,717 அடி உயரத்தில் அமர்ந்துகொண்டு ஐக்கிய அரபு இராச்சியத்தின் கொடியை அசைக்கின்றார். இது வேர்ல்ட் எக்ஸ்போ 2020க்கான பிரசாரங்களில் ஒரு பகுதியாம்.

ஊக்கமளிக்கும் விதமான இந்த நிகழ்வை வீடியோவாக இணையத்திலும் இளவரசரின் பேஸ்புக் பக்கதிலும் அதிகாரபபூர்வமாக வெளியிட்டதனைத் தொடர்ந்து பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

வேர்ல்ட் எக்ஸ்போ 2020 நடைபெறும் நடாக தெரிவானது குறித்து இளவரசர் ஹம்டன் கூறுகையில், இந்த வெற்றி உலக அரங்கில் எமது தரத்தை நிரூபித்துள்ளது. இந்த டுபாய் வர்த்த கண்காட்சி 2020 புதியதேர் காற்றை பழைமையான மத்திய கிழக்கில் சுவாசிக்கும். வெற்றிக்கு உழைத்த அனைவருக்கும் நன்றி எனவும் தெரிவித்துள்ளார்.

வேர்ல்ட் எக்ஸ்போ 2020 நிகழ்வுக்காக பாரிய கண்காட்சி மண்டபம் மற்றும் மெட்ரோ ரயில் திட்டம் உள்ளிட்ட பலவகையான அபிவிருத்தித்தித் திட்டங்கள் எமிரேட்ஸில் முன்னெடுக்கப்படவுள்ளன.

எமிரேட்ஸில் நடைபெறுவள்ள இந்நிகழ்வுக்கு சுமார் 112,450 கோடி ரூபா செலவாகும் எனக் மதிப்பிடப்பட்டுள்ளதுடன் சுமார் 301,650 கோடி ரூபா வருமானமாக கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

3205Dubai-1

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தன்னை கொன்று உண்ண அனுமதித்த நபர்: குத்திக்கொலை செய்து உண்ட நபர் கைது
Next post தற்கொலையை இணைய தளத்தில் ஒளிபரப்பிய வாலிபர்