நெடுந்தீவு பி.சபை தலைவர் கொலை: வட மாகாணசபை எதிர்கட்சித் தலைவர் உள்ளிட்ட மூவர் கைது

Read Time:2 Minute, 9 Second

epdp.kamal-01ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளரும் வடமாகாண சபையின் எதிர்கட்சித் தலைவருமான கமலேந்திரன் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் நெடுந்தீவு பிரதேச சபை தலைவர் தானியல் றெக்சியனின் (ரஜீவ்) மனைவியும், மற்றுமொரு நபரும் இன்றுகாலை கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

மேலும் நெடுந்தீவு பிரதேச சபை தலைவர் தானியல் றெக்சியனின் (ரஜீவ்) அண்மையில் படுகொலை செய்யப்பட்டார். இக்கொலையுடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் அடிப்படையில் மேற்கூறிய மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குடும்ப பிரச்சினை மற்றும் கள்ளத்தொடர்பு என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு இக்கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன குறிப்பிட்டார்.

குறித்த படுகொலைச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வரும் விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவு பொலிஸார் சந்தேகத்தின் அடிப்படையில் நெடுந்தீவுப் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவரை ஏற்கனவே கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடந்த 27 ம் திகதி புங்குடுதீவில் தனித்திருந்த நிலையில் நெடுந்தீவு பிரதேச சபை தலைவர் தானியல் றெக்சியன் (ரஜீவ்) சுட்டுப்படுகொலை செய்யப்பட்டிருந்தார்.

கொல்லப்பட்டவரது தலையில் துப்பாக்கிச்சூட்டு காயங்கள் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மனைவியுடன் கள்ளத் தொடர்பு?: ஈ.பி.டி.பி பிரதேசத் தலைவரின் கொலையின் பின்னணியில், ஈ.பி.டி.பி யாழ் பொறுப்பாளர் கமல்?!
Next post இறப்பதற்கு முன் பேஸ்புக்கில் எதிர்வுகூறிய பெண்..!