(VIDEO) கார் வாங்குவதற்கு கணவரை நிர்ப்பந்திப்பதற்காக, ஆடம்பர காரை உராய்ந்து சேதப்படுத்திய பெண்

Read Time:2 Minute, 24 Second

010சீனாவைச் சேர்ந்த பெண் ஒருவர், தனக்கு ஆடம்பர காரொன்றை வாங்கித் தருவதற்கு கணவரை நிர்ப்பந்திக்கும் நோக்குடன் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த காரை உராய்ந்து சேதப்படுத்திய சம்பவம் அண்மையில் இடம்பெற்றுள்ளது.

தனது கணவர் ஒருவர் தன்னை விட இளமையாக தோற்றமளிப்பதால் இப்பெண் மிகவும் பொறாமைக்கொண்டிருந்தாராம்.

இவர்கள் இருவரும் சீனாவில் நடைபெற்ற வாகனக் கண்காட்சியொன்றில் கலந்துகொண்டபோது அங்கு காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த சுமார் 42 லட்சம் பெறுமதியான காரின் மேற்பரப்பை திடீரென உராய்ந்து சேதப்படுத்தத் தொடங்கினார்.

காரை சேதப்படுத்திவிட்டால் அதை விலைகொடுத்து வாங்குவதற்கு தனது கணவர் நிர்ப்பந்திக்கப்படுவார் என்பதே இப்பெண்ணின் நோக்கம்.

‘திருமணத்தின்பின் நான் வயதான தோற்றத்துக்கு மாறிக்கொண்டிருக்கும் நிலையில் எனது கணவர் இளமையாகிக் கொண்டு போகிறார். இந்தத் திருமணத்தினால் நான் அனைத்தையும் இழந்துவிட்டேன். அதனால் கணவர் காரொன்றை தனக்கு வாங்கித் தர வேண்டும்’ என அப்பெண் சத்தமிட்டார்.

இப்பெண்ணின் நடவடிக்கையை பார்த்த அவரின் கணவரும் ஏனையோரும் அதிர்ச்சியடைந்தனர். இக்காட்சி பல கெமராக்களிலும் பதிவுசெய்யப்பட்டன.

கணவர் பொறுக்க முடியாமல் அங்கிருந்து வரும்படி கூறினார். அப்பெண் வரமறுத்தால் அவரின் கையைப்படி கைபிடித்து இழுத்துச் சென்றார். ஆனால் அப்பெண் கையை விடுவித்துக கொண்டு சென்று மீண்டும் காரை உராயத் தொடங்கினார். பின்னர் கண்காட்சி ஊழியர்கள் தலையிட்டு அப்பெண்ணை அங்கிருந்து அகற்றினர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வாழைத் தோட்டத்திற்குள் சல்லாபத்தில் ஈடுபட்ட ஜோடி கைது
Next post மனைவியை வெட்டி 3 துண்டுகளாக்கிய கணவன்..