மண்டேலாவின் நல்லடக்கத்தில் பங்கேற்க அமெரிக்க அதிபர் பயணம்

Read Time:1 Minute, 57 Second

017தென் ஆப்பிரிக்க முன்னாள் அதிபரும் கறுப்பின தலைவருமான நெல்சன் மண்டேலா ஜோகனஸ்பர்கில் உள்ள தனது வீட்டில் நேற்று மரணம் அடைந்தார். அவரது உடல் ராணுவ மரியாதையுடன், தேசியக் கோடி போர்த்தப்பட்டு ராணுவ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

நெல்சன் மண்டேலாவின் உடல் வரும் 15-ம் தேதி கிழக்கு கேப் மாகாணத்தில், அவரது சொந்த ஊரான கினு கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டு இறுதிச்சடங்கு செய்யப்படும். பின்னர் அங்கேயே உடல் நல்லடக்கம் செய்யப்படும்.

அவரது மறைவுக்கு ஒருவாரம் தேசிய துக்கம் அனுசரிக்கப்படுகிறது. டிசம்பர் 8-ம் தேதி தென் ஆப்பிரிக்க மக்களுக்கு தேசிய பிரார்த்தனை நாள் ஆகும். 10-ம் தேதி ஜோகனஸ்பர்க் கால்பந்து மைதானத்தில் நினைவஞ்சலி நிகழ்ச்சி நடைபெறும். இதில் ஒரு லட்சம் பேர் வரை பங்கேற்க முடியும்.

11-ம் தேதி முதல் அடக்கம் செய்யப்படும்ம் வரையில் பிரிட்டோரியாவில் உள்ள அரசு கட்டிடங்களில் அவரது உடல்வைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்படும் தென் ஆப்பிரிக்க அதிபர் ஜேக்கப் ஜுமா தெரிவித்துள்ளார்.

நெல்சன் மண்டேலாவின் உடல் நல்லடக்கத்தில் பங்கேற்க மனைவி மிச்சேல் உடன் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா அடுத்த வாரம் தென்னாப்பிரிக்காவுக்கு பயணமாவதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இலங்கையில் இவ்வாண்டில் 500 பேர் சுட்டுக்கொலை
Next post 5 வருடங்களாக சம்பளம் இல்லை: 9 வருடங்களாக சவுதியில் குணவதிக்கு வீட்டு சிறை