ஆணுடன் ஆண் : ஆஸ்திரேலியாவில் முதல் டும்டும்..!
கான்பெர்ரா: ஆஸ்திரேலியாவில் முதன் முதலாக ஆணுடன் ஆணுக்கு திருமணம் நேற்று அதிகாலையில் நடந்தது. ஓரின பிரியர்கள் திருமணம் செய்ய அனுமதித்து புதிய சட்டம் அமலுக்கு வந்த சில வினாடிகளில் இந்த திருமணம் கான்பெர்ரா நகரில் நடந்தது.
ஓரினச்சேர்க்கை பிரியர்களின் கூட்டமைப்பு தலைவர் ரோட்னி க்ரூம் வெள்ளிக்கிழமை நள்ளிரவு சட்டம் அமலானதும் அடுத்த சில விநாடிகளில் ஆணுடன், ஆண் ஓரின திருமணத்தை நடத்தி வைத்தார். ‘இவர்களை போல, 46 ஜோடிகள் இன்னும் ஒரு வாரத்தில் திருமணம் செய்ய உள்ளனர்.
ஆஸ்திரேலியா இந்த சட்டத்தை கொண்டு வந்ததன் மூலம், ஓரினச் சேர்க்கை திருமணத்தை அனுமதிக்கும் நாடுகளுடன் சேர்ந்து விட்டது மகிழ்ச்சியான ஒன்று’ என்றார்.
மத மற்றும் பிற்போக்குவாத அமைப்பினர் சேர்ந்து இந்த சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு போட்டுள்ளனர். 12 ம் தேதி அதன் மீது விசாரணை நடக்க உள்ளது.
Average Rating