உதயன் பத்திரிகையும், அதன் விருதும் -ஜெகன் பத்மநாதன் (முகநூலிலிருந்து)

Read Time:9 Minute, 45 Second

020அண்மையில் பிரான்ஸ் எல்லைகள் அற்ற ஊடகவியலாளர் அமைப்பு, யாழ்ப்பாணம் உதயன் பத்திரிகை பத்திரிகைக்கு நெருக்கடி நிலைமையில் ஊடக பணி ஆற்றியமைக்காக விருது ஒன்றை வழங்கியது. இது உண்மையில் வரவேற்கப்பட வேண்டிய விடயம். இதை எந்தளவிற்கு வரவேற்கிறோமோ, அந்தளவிற்கு இந்த நாட்டை சுடுகாடாக்கி நாசமாக்கிய காரணிகளில் உதயன் பத்திரிகையும் கணிசமான இடம் உண்டு. கடந்தகால வரலாறுகளை புரட்டி பார்க்காமல் அண்மையில் வந்த இரு செய்திகளை கூறலாம்…

நடந்து முடிந்த வடக்கு மாகாணசபை தேர்தலில் கூட்டமைப்பு வெற்றி பெற்றதை உதயன் பத்திரிகை, “தமிழ் அரசு மலர்ந்தது” என்று பிரதான செய்தியாக வெளியிட்டது. அந்த செய்தியின்படி பார்த்தால் வடக்கு மாகாணம் மட்டும் தமிழ் அரசா? என எண்ண தோன்றுகின்றது. அப்படியாயின் கிழக்கு மாகாணம் தமிழ் பிரதேசம் இல்லையா? கிழக்கு மாகாணத்தையும் கூட்டமைப்பு கைப்பற்றி, இவ்வாறு செய்தியாக வந்திருந்தால் அதில் ஒரு நியாயம் இருக்கின்றது.

அடுத்த செய்தியாக, வடக்கு மாகாணசபை தேர்தல் வெற்றி குறித்து “மாவீரரின் கனவு நிறைவேறியது” என ஆனந்தி எழிலன் கூறியதாக ஒரு செய்தி வெளியிட்டது. வடக்கு மாகாணத்தை பெறுவதற்காகவா புலிகளில் 35ஆயிரத்திற்கு மேற்பட்ட போராளிகள் இறந்தார்கள்? இதுதான் மாவீரரின் கனவாயின், இந்தியா கொடுத்த வடக்கு,கிழக்கு இணைந்த காணி, பொலிஸ் அதிகாரங்களுடன் கூடிய மாகாணசபையை ஏற்றிருக்கலாம். இந்தளவு உயிர் இழப்புகளும் சொத்தழிவுகளும் ஏற்பட்டிருக்காது.

இலங்கையில் தமிழர் தரப்பிலும் சரி சிங்களவர் சரி கருத்து சுதந்திரத்திற்கு ஊடக சுதந்திரத்திட்கும் இம்மியளவும் இடம் கொடுக்கபடாத நிலையில் அதையும் மீறி உண்மைகளை வெளியில் கொண்டு வந்த ஊடகவியலாளர்கள் எல்லா ஊடகங்களிலும் இருந்தார்கள், இருக்கிறார்கள்.

இவர்களின் சவால்களுக்கு மதிப்பு கொடுக்கும் ஒரு முதல் நடவடிக்கையாகவே உதயன் பத்திரிகைக்கு வழங்கப்பட்ட விருதை கருத வேண்டியிருக்கிறது. உண்மைகளை துணிந்து வெளியில் கொண்டு வந்த பல தமிழ் சிங்கள ஊடகவியாளர்கள் அரச தரப்பாலும், தமிழ் தரப்பாலும் கொல்லப்பட்டார்கள், காணாமல் போனார்கள், கடத்தப்பட்டார்கள், அச்சுறுத்தப்பட்டார்கள்.

Ltte-Piraba.bmpஆனாலும் சில ஊடகங்கள் உதயன் பத்திரிக்கை விருது வாங்கிய படங்களை பிரசுரிப்பதற்கு பதிலாக, பிரபாகரன் உதயன் பத்திரிகை வாசிக்கும் படத்தை பிரசுரித்து வருகின்றன. இந்த படம் குறித்த சம்பவத்தை கட்டாயம் உங்களுக்கு தெரிவிக்க வேண்டும். இது பலருக்கு தெரிந்த உண்மை..

பிரபாகரன் உதயன் பத்திரிகை வாசிக்கும் படம் 2002ஆம் ஆண்டு, சமாதான ஒப்பந்தத்திற்கு முன்னர் என நினைக்கிறேன் இந்த படம் உதயன் பத்திரிகையில் வெளியானது. அதில், “தமிழீழ தேசிய தலைவர் உதயன் பத்திரிகை வாசித்துக் கொண்டிருக்கும் போது எமது செய்தியாளரின் காமரா கண்களில் சிக்கினார்” என்று படத்திற்கான செய்தியாக இருந்தது.

யாழ்ப்பாணம் சிவன் கோவிலுக்கருகில் இருக்கும் சண்முகம் கடையில் இருந்து, பிரபாகரன் ரீ குடிக்கும் போது படம் எடுத்ததை போன்று செய்தி வெளியாகியமை பல பத்திரிகையாளர்களுக்கு ஆச்சரியத்தையும், கொதிநிலையையும் ஏற்படுத்தியது உண்மையே.

படம் உதயன் பத்திரிகையில் வெளிவந்ததை விட படத்துக்கான செய்தி பலருக்கு கடுப்பை ஏற்ப்படுத்தியது உண்மையே.. இதற்கு முடிவுகட்டும் முகமாக சில மாதங்களுக்கு பின், பளையில் புலிகளின் நிதிப் பொறுப்பாளராக இருந்த தமிழேந்தியால் நிதி சம்பந்தமான கூட்டமொன்றிட்கு பத்திரிகையாளர்கள் அழைக்கப்படுகிறார்கள்.

கூட்டத்திற்கு வந்த தமிழேந்தி, கூட்டமேதுவுமில்லை. நான் சொல்ல வந்ததை அறிக்கையாக கொண்டு வந்துள்ளேன். அதை எடுத்துச் செல்லுங்கள் என்று கூறுகின்றார். அப்போது உதயன் பத்திரிகையின் பிரதம செய்தியாளராக இருந்த குகநாதன்(வெத்திலை) தன்னுடன் நின்று ஒரு படம் எடுக்க வருமாறு தமிழேந்தியை கேட்கிறார். என்ன கோபம் வந்ததோ தெரியவில்லை தமிழேந்தி, குகநாதனை கடும் வார்த்தைகளால் பேசுகின்றார். எதற்காக இப்படி பேசுகின்றார்?? என அங்கிருந்த வன்னி ஊடகங்கள் தவிர்ந்த, பத்திரிகையாளர் எவருக்கும் புரியவில்லை. ஏனெனில் ஊடவியலாளர்கள் சேர்ந்து நின்று படம் எடுப்பதற்கு எந்த புலி பொறுப்பாளர்களும் மறுப்பு தெரிவிப்பதில்லை.

தமிழேந்தி சென்ற பின் புலிகளின் குரல், ஈழநாதம் ஊடகவியலாளர்களிடம், யாழ்ப்பாணம், வவுனியாவில் இருந்து சென்ற ஊடகவியாளர்கள் கேட்கின்றார்கள். அப்போது தான் “உதயன் அலுவலகத்தில் பார்வைக்காக வைக்கப் போகின்றேன்” என்று பிரபாகரனிடம் கூறியே, உதயன் பிரதம ஆசிரியராக இருந்த வித்தியாதரனால் இந்த படம் எடுக்கப்பட்டதாகவும், அதை பத்திரிகையில் பிரசுரித்தமையால் இயக்கத்திற்கு கோபம் இருப்பதாக வன்னி ஊடகவியலாளர்கள் கூறுகின்றனர். இதையே புலிகளின் புலனாய்வு பொறுப்பாளர் பொட்டம்மானும் தன்னை தனிப்பட சந்தித்த பத்திரிகையாளர்களிடம் கூறியிருக்கின்றார்.

LTTE.tiger_money.gifஅப்போதுதான் சப்ரா சரவணபவனதும் சுடலை வித்தியினதும் தில்லுமுல்லு எல்லோருக்கும் புரிந்தது.. பிரபாகரனையே தனது சொந்த வியாபாரத்துக்காக,விளம்பரத்திற்காக சச்சின் டெண்டுல்கராக பயன்படுத்திய சப்ராவுக்கு, பிரித்தானிய பிரதமரை தனது உதயன் அலுவலகத்திற்கு கூட்டி செல்வதோ அல்லது இந்த விருதை பெறுவதோ பெரிய விடயம் இல்லை.

ஏன் நாளைக்கு அமெரிக்க ஜனாதிபதி, பிரான்ஸ் பிரதமர் கூட அந்த அலுவலகத்திற்கு சென்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. பிரித்தானிய பிரதமரை எவ்வாறு தனது அலுவலகத்திற்கு சப்ரா அழைத்து சென்றமை எல்லா பத்திரிகையாளருக்கும் தெரிந்த விடயமே.

சரியோ தவறோ தமது குடும்பத்தை விட்டு சுகவாழ்வை விட்டு இந்த நாட்டின் விடுதலைக்காக போராட புறப்பட்ட அது புலியாய் இருந்தாலும் சரி, புளொட்டாய் இருந்தாலும் சரி, ஈப்பியை இருந்தாலும் சரி அல்லது டெலோவாக இருந்தாலும் சரி அவர்களுக்கு பொருத்தமான பதவியையோ அல்லது ஒரு அமைச்சையோ கொடுப்பதற்கு தயங்கும் கூட்டமைப்பு, ஊரறிந்த கள்ளன் உலகறிந்த கொள்ளைக்காரன் சப்ராவை எப்படி தலையில் வைத்து கொண்டாடுகின்றது என்பது புரியவில்லை.

வடக்கு மாகாணசபை தேர்தலில் உதயன் பத்திரிகை பிரதம ஆசிரியராக இருந்த வித்தியாதரனை முதலமைச்சர் வேட்பாளராக நியமிப்பதாக இருந்தது. ஆனால் அது இறுதிநேரத்தில் பத்திகையாளர்களின் அழுத்தத்தினாலும், வேறு சில காரணங்களினாலும் கைகூடவில்லை. இதே போன்று சப்ராவையும் கூட்டமைப்பு அடுத்த பாராளுமன்ற தேர்தலில் கலைக்க வேண்டும். இதற்கு பத்திரகையாளர்கள் கூட்டமைப்பு தலைமைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

020

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post குடித்துவிட்டு அடித்த கணவனை, கத்தியால் குத்தி கொன்ற மனைவி
Next post நள்ளிரவில் போனில் ஆபாசமாக பேசுகிறார்கள் : ஹீரோயின் குமுறல்