புத்தரின் உருவம் பதித்த கையுறைகள் விற்பனை: பிரித் ஓதியபின் முஸ்லிம் வர்த்தகரை மன்னிப்பு கோரச்செய்த பிக்குகள்

Read Time:2 Minute, 12 Second

buddhகட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் உள்ள முஸ்லிம் வர்த்தகர் ஒருவருக்கு சொந்தமான அழகு சாதனப் பொருட்களை விற்பனை செய்யும் கடையில் புத்தரின் உருவம் கொண்ட கையுறைகளை விற்பனைக்காக வைத்திருந்தமை தொடர்பாக தேரர்கள் மற்றும் பொதுமக்கள் முஸ்லிம் கடையில் பிரித் ஓதி வியாபாரியை பொதுமன்னிப்பு கோரச் செய்த சம்பவம் சனிக்கிழமை மாலை இடம்பெற்றது.

இது தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது. கட்டுநாயக்க சுதந்திர வர்த்க வலயத்தில் அமைந்துள்ள குறித்த வர்த்தக நிலையத்தில் பெண்கள் அணியும் நீண்ட கையுறைகளில் புத்தரின் உருவ சித்திரம் இருந்துள்ளது.

இந்த கையுறையை அணிந்தால் கைகளில் பச்சை குத்தியது போல் தெரியும். இது தொடர்பாக அறிந்து கொண்ட பௌத்த மதகுருக்கள் உட்பட சிலர் அண்மையில் இந்த கடைக்குச் சென்று ஏற்படுத்திய பிரச்சினையை அடுத்து அந்த கடையை சில தினங்களுக்கு மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில்இ கடந்த சனிக்கிழமை வர்த்தகர் கடையை மீண்டும் திறக்க முற்பட்டபோது பௌத்த தேரர்கள் மற்றும் பொது மக்கள் கொண்ட குழுவினர் அந்த கடையின் முன்பாக பிரித் ஓதும் ஒலி நாடாவை ஒலிக்கவிட்டனர்.

இதன்போது அந்த கடையிலும் அயலிலும் பௌத்த கொடிகள் பறக்கவிடப்பட்டமை ஒலிபெருக்கி மூலமாக அறிவிப்பு செய்யப்பட்ட் குறிப்பிடத்தக்கது. அதன் பின்னர் அந்த வர்த்தக நிலையம் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post குழிக்குள்ளிருந்து மீட்கப்பட்ட குட்டி யானை குடியிருப்பு பிரதேசத்துக்குள்..
Next post இரு காதலர்களின் சண்டையால், ஓடைக்குள் பாய்ந்த காதலி!