மண்டேலா மறைவு: அழுகையும் ஆட்டமும்..

Read Time:1 Minute, 43 Second

mandela-001தென்னாபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலா கடந்த வெள்ளிக்கிழமை இரவு காலமானதையடுத்து, உலகம் முழுவதும் சோகம் பரவித் தொடங்கியது.

சனிக்கிழமை அதிகாலை முதல் உலகின் பல நாடுகளிலும், மண்டேலாவுக்கு தலைவர்களும் மக்களும் அஞ்சலி செலுத்த ஆரம்பித்தனர்.

தமது ஒப்பற்றத் தலைவனின் மரணம் தென்னாபிரிக்க மக்களையும் சோகத்தில் பெரும் ஆழ்த்தியது.

கறுப்பின மக்களும் வெள்ளையின மக்களும் ஒருவரையொருவர் கட்டியணைத்துக்கொண்டு அழுதனர்.

ஆனால் தென்னாபிரிக்காவின் சில நகரங்களில் மக்கள் ஆடிப்பாடவும் செய்தனர். நெல்சன் மண்டேலாவின் வாழ்க்கையை கொண்டாடுவதற்காக இவ்வாறு அவர்கள் ஆடிப்பாடியமை குறிப்பிடத்தக்கது.

‘அவர் எமக்காக போராடினார். இப்போது அவருக்கு ஓய்வு தேவை’ என ஒருவர் கூறினார்.

தென்னாபிரிக்க ஜனாதிபதி ஜேக்கப் ஸுமாவும் இத்தகைய உணர்வை ஊக்குவித்தார். ‘நாம் துயரமடைந்துள்ளோம். அதேவேளை இந்த மாபெரும் புரட்சியாளரின் வாழ்க்கையை கொண்டாடுவதற்காக எமது உரத்தகுரலில் பாடவும் ஆடவும் செய்கிறோம்’ என தென்னாபிரிக்க ஜனாதிபதி ஜேக்கப் ஸுமா தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆணாக உணர்ந்த பெண்ணும், பெண்ணாக உணர்ந்த ஆணும் அதிசய திருமணம்
Next post (VIDEO) அஜித்தின் ‘வீரம்’ – புத்தம் புதிய டீஸர்