நெல்சன் மண்டேலாவின் திருமணங்களும், காதல்களும்..

Read Time:10 Minute, 48 Second

mandela-002உலக அரங்கில் கோடிக்கணக்கான மக்களின் மனதைக் கவர்ந்தவர் நெல்சன் மண்டேலா. அவர் மீது அன்பு, மதிப்பு, மரியாதை கொண்ட பொதுமக்கள் மட்டுமல்ல, உலக நாடுகளின் தலைவர்களும் உள்ளனர் என்பது பலரும் அறிந்ததுதான். அதேவேளை, அவர் மீது காதல் கொண்ட பெண்களும் பலர்.


‘மண்டேலா பெண்களால் விரும்பப்படும் ஆணாக இருந்தார். அதற்காக அவர் பெருமிதம் கொண்டிருந்தார்’ என மண்டேலாவின் சுயசரிதையை எழுதிய அந்தனி சம்ஸன் தெரிவித்திருந்தார்.

தனது தந்தையின் ஏற்பாடு செய்த திருமணமொன்றை நிராகரித்த நெல்சன் மண்டேலா, பின்னர்  3 தடவை திருமணம் செய்தார். அவருக்கு 6 பிள்ளைகள் பிறந்தனர். அவர்களில் மூவரே தற்போது உயிருடன் உள்ளனர். மண்டேலாவுக்கு 17 பேரப்பிள்ளைகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

உலகின் மாபெரும் தலைவர்களில் ஒருவரான மண்டேலாவின் தனிப்பட்ட வாழ்க்கையும் மகிழ்ச்சிகள், சோகங்கள், துயரங்கள், அதிர்ச்சிகள் கலந்த கலவையாகும்.


தென்னாபிரிக்காவின் முதலாவது கறுப்பின ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் அவர் தனது மனைவியை விவாகரத்துச் செய்தார். இது தொடர்பாக வழக்கு விசாரணையில் மண்டேலாவின் குடும்பத்தில் நிலவிய சர்ச்கைகளும் பகிரங்கமாகின.

1918 ஆம் ஆண்டு தென்னரிபிக்காவின் ட்ரான்ஸி எனும் பிராந்தியத்தின் சிறிய கிராமமொன்றில் பிறந்தவர்  நெல்சன் மண்டேலா.  

கல்லூரியில் விடுதியொன்றில்  தங்கிப் படித்துக் கொண்டிருந்த மண்டேலாவுக்கு  திருமணமொன்றை நடத்திவைக்க அவரின் தந்தை தீவிரமாக முயன்றபோது மண்டேலா அதை விரும்பவில்லை.

அப்போது திருமணம் செய்துகொள்ளத் தயாரில்லை எனக் கூறிய மண்டேலா வீட்டிலிருந்து வெளியேறி ஜொஹான்னஸ்பேர்க் நகருக்குச் தப்பிச்சென்றார்.

ஜொஹான்னஸ்பேர்க் நகரில் மண்டேலா முற்றிலும் வித்தியாசமான வாழ்க்கையை வாழ ஆரம்பித்தார் மண்டேலா. குத்துச்சண்டையில் அவர் கற்க ஆரம்பித்ததும் அங்குதான். அந்நகரில்தான் தனது பி.ஏ. பட்டப்படிப்பைபை பூர்த்தி செய்தார். சட்டத்துறையிலும் அவர் பட்டம் பெற்றார்.

பின்னாளில் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் பொதுச் செயலாளராக பதவி வகித்த வால்டர் சிசுலுவைச் சந்தித்த அவர், ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியிலும் இணைந்தார்.

வோல்டரின் குடும்பத்துக்கூடாக அவரின் உறவினரான ஈவ்லின் மெஸே எனும் யுவதியை சந்தித்த நெல்சன் மண்டேலா, 1944 ஒக்டோபரில் அவரை திருமணம் செய்தார். அப்போது மண்டேலாவுக்கு 26 வயது. ஈவ்லினுக்கு 22 வயது.

இத்தம்பதிக்கு 4 பிள்ளைகள் பிறந்தனர்.  இப்பிள்ளைகளில் ஒருவர் மாத்திரமே தற்போது உயிருடன் உள்ளார். இரண்டாவதான மெகாஸிவே 9 மாதத்திலேயே நோயினால் இறந்தார்.

1945 இல் பிறந்த மூத்த மகனான தெம்பி மண்டேலா 1969 ஆம் ஆண்டு கார் விபத்தொன்றில் பலியானார். 1950 இல் பிறந்த மகன் மக்ததோ, 2005 ஆம் ஆண்டு இறந்தார். இம்மரணத்துக்கு காரணம் எயிட்ஸ்.

மண்டேலா, ஈவ்லின் தம்பதியின் பிள்ளைகளில் நான்காவதாக 1954 இல் பிறந்த மகள் மெகாஸிவே மாத்திரமே தற்போது உயிருடன் உள்ளார்.

இத்தம்பதியின் இரண்டாவது மகன் குழந்தைப் பருவத்திலேயே உயிரிழந்தமை ஈவ்லினை மிகவும் பாதித்தது. அவர் கடவுள் பக்தி மிகுந்தராக மாறிப்போனார். தேவ ஊழியங்களில் ஈடுபாடு காட்டத் தொடங்கினார். மண்டேலாவோ கறுப்பின மக்களின் விடுதலைக்கான அரசியலில் தீவிர ஈடுபாடு காட்டினார்.

தேசத்துரோக குற்றச்சாட்டில் மண்டேலா கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலையானபோது பிள்ளைகள் மூவருடன் சகோதரர் வீட்டுக்குச் சென்றிருந்தார் ஈவ்லின்.

மண்டேலா தன்னை தாக்கியதாகவும் துரோகமிழைத்ததாகவும் ஈவ்லின் குற்றம் சுமத்தினார். விவாகரத்துக்கான தனது மனுவை ஈவ்லின் பின்னர் வாபஸ் பெற்றபோதிலும் பின்னர் நெசல்ன் மண்டேலா விவகாரத்துக்கு விண்ணப்பித்தார். 1957 ஆம் ஆண்டு இத்தம்பதியினர் விவகாரத்துச் செய்தனர்.

இவ்விவாகரத்துக்கான விசாரணைகள் நடைபெற்றுக்கொண்டிருந்த காலத்தில்தான் 1957 ஆம் ஆண்டு தன்னைவிட () வருடங்கள் இளமையான   வின்னி மெடிகேஸெலாவை மண்டேலா சந்தித்தார்.

1958 ஆம் ஆண்டு இவர்கள் திருமணம் செய்தனர். இத்தம்பதிக்கு 1959 ஆம் ஆண்டு ஸெனானனி எனும் மகனும் (இவர் தற்போது ஆர்ஜென்டீனாவுக்கான தென்னாபிரிக்கத் தூதுவர்) ஸின்ஸி எனும் மகளும் பிறந்தனர்.

நெல்சன் மண்டேலாவும் வின்னி மண்டேலாவும் திருமணம் செய்து அதிக காலம் இணைந்துவாழ முடிவில்லை. 1962 ஆம் ஆண்டு அரசை கவிழ்க்க சதிசெய்த குற்றச்சாட்டில் மண்டேலாவுக்கு ஆயுட்காலத் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

மண்டேலா சிறையில் இருந்த காலத்தில் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் போராட்டங்கள் பலவற்றை வின்னி மண்டேலா முன்னெடுத்தார்.

ஆனால், வின்னி மன்டேலா மீது பல மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. 1989 ஆம் ஆண்டு இளைஞர் ஒருவரை தனது உதவியாளர்கள் ஊடாக கடத்தி கொலை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்ட வழக்கில்  1991 ஆம்  ஆண்டு வின்னி குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டது. ஆனால், அவரின் சிறைத்தண்டனை பின்னர் அபராதமாக குறைக்கப்பட்டது.

1990 பெப்ரவரியில் மண்டேலா சிறையிலிருந்து விடுதலையானவுடன் 1992 ஆம் ஆண்டு அவருக்கும் வின்னி மண்டேலாவுக்கும் இடையில் விரிசல் ஏற்பட்டது.

எனினும் 1994 மண்டேலா ஜனாதிபதியானபோது உத்தியோகபூர்வமாக நாட்டின் முதல் பெண்மணியாக வின்னி மண்டேலா விளங்கினார்.

1996 ஆம் முற்பகுதியில், விவாகரத்து வழக்கு நடைபெற்றது. வெறொரு நபருடன் வின்னிக்கு முறையற்ற தொடர்பிருந்ததாகவும் தனக்கு அவர் துரோகமிழைத்ததாகவும் நெல்சன் மண்டேலா தெரிவித்தார். 1996 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இவர்கள் விவாரத்துப் பெற்றனர்.

அதன்பின் பின்னர் தன்னைவிட 27 வருடங்கள் இளமையான கிறேக்கா மெச்செலை நெல்சன் மண்டேலா திருமணம் செய்தார்.

1986 ஆம் ஆண்டு விமான விபத்தில் பலியான மொஸாம்பிக் ஜனாதிபதியான சமோரா மெச்சலின் விதவை மனைவிதான் கிறேக்கா மெச்செல். 1998 ஆம் ஆண்டு மண்டேலாவின் 80 ஆவது பிறந்த தினத்தில் மண்டேலாவுக்கும் கிறேக்காவும் திருமணம் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு 1995 ஆம் ஆண்டு மண்டேலா கோரியதாகவும் அதற்கு தான் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் ஆமினா கச்சாலா எனும் பெண் தனது சுயசரிதையில் தெரிவித்திருந்தார்.

கறுப்பின மக்களின் விடுதலைக்காக பாடுபட்ட ஆமினாவும் அவரின் கணவர் யூஸுப் கச்சாலும் மண்டேலா சிறை செல்வதற்கு முன்னரே அவரின் நண்பர்களாக விளங்கியவர்கள்.

நிறவெறி அரசினால் 15 வருடகாலம் வீட்டுக்காவலில் வைக்கப்பட்ட ஆமினா கச்சால் 1994 நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவானார். இவ்வருடம் ஜனவரி மாதம் ஆமினா கச்சால் தனது 82 ஆவது வயதில் காலமானார். அவர் இறந்து 37 நாட்களின்பின் அவரின் சுயசரிதை நூல் வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

1986 ஆம் ஆண்டு விமான விபத்தில் பலியான மொஸாம்பிக் ஜனாதிபதியான சமோரா மெச்சலின் விதவை மனைவிதான் கிறேக்கா மெச்செல். 1998 ஆம் ஆண்டு மண்டேலாவின் 80 ஆவது பிறந்த தினத்தில் மண்டேலாவுக்கும் கிறேக்காவும் திருமணம் நடைபெற்றது.

இதற்கிடையில் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு 1995 ஆம் ஆண்டு மண்டேலா கோரியதாகவும் அதற்கு தான் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் ஆமினா கச்சாலா எனும் பெண் தனது சுயசரிதையில் தெரிவித்திருந்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post (VIDEO) அஜித்தின் ‘வீரம்’ – புத்தம் புதிய டீஸர்
Next post WWE புகழ் ‘கிரேட் காளி’ (PHOTOS)