ஓரினச் சேர்க்கை சட்டவிரோதமா? : கொந்தளிக்கும் நடிகர், நடிகைகள்..

Read Time:1 Minute, 51 Second

3341Sruthiஇந்தியாவில் ஓரினச் சேர்க்கை சட்டவிரோதமானது என நேற்று இந்திய உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனையடுத்து இந்திய நடிகர்கள் மற்றும் நடிகைகள் தங்களது எதிர்ப்பினை வெளியிட்டுள்ளனர்.

ஆண், பெண் ஓரினச் சேர்க்கை ஐ.பி.சி 377 சட்டத்தின் பிரகாரம் சட்டவிரோதமானது என்பதுடன் தண்டனைக்குரிய குற்றம் என தீர்ப்பளிக்கப்பட்டது. இதனையடுத்தே நடிகர்கள் மற்றும் நடிகைகள் கொந்தளிக்க ஆரம்பித்துள்ளனர்.

இது குறித்து பொலிவூட் நாயகன் அமிர்கான் கூறுகையில், தீர்ப்பு மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது. மனிதனின் அடிப்படை உரிமைகளை மீறுவதாக உள்ளதாக கருதுகிறேன். இது ஒரு அவமானம் எனத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஸ்ருதி ஹாஸன் டுவிட்டரில் கருத்து வெளியிடுகையில், ஒருவர் எப்படி, எப்பொழுது, யாரை காதலிக்க வேண்டும் என்று 377 முடிவு செய்வது பயமுறுத்தும் வகையில் உள்ளது. நம் விருப்பப்படி தேர்வு செய்வது இனி சட்டப்படி சரியாகாது எனத் தெரிவித்துள்ளார்.

இவர்கள் மட்டுமன்றி ஜோன் ஆப்ரகாம், பர்ஹான் அக்தர், நடிகை ஷபானா அஸ்மி, நடிகர் சித்தார்த், இயக்குன மாதுர் பந்தர்கர் உள்ளிட்ட மேலும் பலரும் ஓரீனச் சேர்க்கையாளர்களுக்கு எதிரான தீர்ப்புக்கு தமது எதிர்ப்பினை வெளியிட்டுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மன்னார் பிராந்திய ஊடகவியலாளரிடம் ரி.ஐ.டி விசாரணை
Next post ஓரினச்சேர்க்கை குறித்த உச்சநீதிமன்ற தீர்ப்பு ஏமாற்றம் அளிக்கிறது: சோனியா