கதவை சிலர் வெளியில் பூட்டியதால், தூக்கில் தொங்கிய கள்ளக்காதலர்கள்!
சேலம்: சேலம் அருகே கள்ளக்காதல் ஜோடி ஒன்றை கையும் களவுமாக பிடிக்க நினைத்த அப்பகுதி பெண்கள் சிலர், அவர்கள் தனிமையில் வீட்டுக்குள் மும்முரமாக இருந்தபோது வெளியில் இருந்து கதவைப் பூட்டி விட்டனர்.
இதனால் அதிர்ச்சியும், அவமானமும் அடைந்த அந்தக் கள்ளக்காதலர்கள் தூக்கில் தொங்கி விட்டனர். அவர்களை மீட்டு தற்போது மருத்துவனையில் சேர்த்தனர். இதில் அப்பெண் உயிரிழந்தார்.
சேலம் மாவட்டம், சந்தியூர் ஆட்டையாம்பட்டியை சேர்ந்தவர் தனபால். இவரது மனைவி பெயர் மணிமேகலை. 30 வயதாகிறது. இந்தத் தம்பதிக்கு அழகான இரண்டு பெண் குழந்தைகள் மற்றும் ஒரு ஆண் குழந்தை உண்டு.
இந்த நிலையில் மணிமேகலை தனது தாய் வீட்டுக்கு அருகே வசித்து வந்த 27 வயதான அருள் என்ற நபருடன் கள்ளக்காதலில் வீழந்தார். பல காலமாக இது நீடித்துள்ளது.
அருளுக்கும் திருமணமாகி, மனைவி, இரண்டு குழந்தைகள் உள்ளனர். சுற்றம், குடும்பம், குழந்தைகள் என அனைவரையும் மறந்து விட்டு இருவரும் அடிக்கடி சந்தித்து தனிமையில் உல்லாசமா இருந்துள்ளனர்.
அடிக்கடி மணிமேகலையைத் தேடி அவரது வீட்டுக்கே வந்து ஜாலியாக இருந்துள்ளார் அருள். இதனால் அக்கம்பக்கத்தில் மக்கள் அறுவெறுப்படைந்தனர். குறிப்பாக பெண்கள் முகம் சுளித்தபடி இருந்தனர்.
இந்த நிலையில் 2 நாட்களுக்கு முன்பு மணிமேகலையைத் தேடி வீட்டுக்கு வந்துள்ளார் அருள். இருவரும் வீட்டுக்குள் கதவைப் பூட்டிக் கொண்டு வேலையை ஆரம்பித்தனர்.
இருவரும் மும்முரமாக இருந்த நிலையில் அக்கம் பக்கத்து பெண்கள் ஒன்று திரண்டு, வந்து மணிமேகலை வீட்டின் கதவை வெளியிலிருந்து பூட்டி விட்டனர்.
கதவை வெளியிலிருந்து பூட்டியதால் மணிமேகலை அதிர்ச்சியும், அவமானமும் அடைந்தார். அருளும் செய்வதறியாமல் திகைத்தார். இதையடுத்து இருவரும் சேலையை எடுத்து தூக்குப் போட்டு மாட்டிக் கொண்டனர்.
இருவரும் தூக்கு மாட்டிக் கொண்டதையடுத்து அக்கம் பக்கத்தினர் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து இருவரையும் மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு போனார்கள்.
அங்கு மணிமேகலை உயிரிழந்தார். அருள் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.