55 வயது சவூதி கோடீஸ்வரிக்கு, இளவயது மணமகன் தேவை..!
சவூதி அரேபியாவைச் சேர்ந்த கோடீஸ்வரி ஒருவர் தனக்கு புதிய கணவர் ஒருவர் தேவை என விளம்பரம் செய்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
படூன் என அழைக்கப்படும் இப்பெண்ணுக்கு சுமார் 55 வயதாகும். ஏற்கனவே திருமணம் செய்து விவாகரத்து செய்துகொண்ட இவருக்கு 4 மகள்கள் உண்டு.
எதுவாக இருந்தால் என்ன பணம் கிடைக்கும்தானே என்ணிவிட வேண்டாம். ஏனெனில் தனக்கு கணவராக வருபவர் எனது பணத்துக்காக என்னைத் திருமணம் செய்துகொள்ளக்கூடாது என்பதையே அவரது பிரதான நிபந்தனையாக முன்வைத்துள்ளார்.
அத்துடன் நன்கு படித்தவராகும் அறிவுள்ளவராகவும் யதார்த்தமானவராகவும் தன்னைவிட இள வயதானவராகும் இருக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்த தனது விளம்பரங்களை சில பத்திரிகைகளில் வெளியிட்டுள்ள இந்த கோடீஸ்வரி தன்னை எவ்வாறு தொடர்புகொள்வது என்பது தொடர்பில் தகவல் வெளியிடவில்லை என அல் அராபியா செய்தி ஊடகம் தெரிவித்துள்ளது.
கணவர் தேடும் இப்பெண் சவூதி அரேபியாவின் 2ஆவது செல்வந்தப் பெண் எனவும் அல் அராபியா தெரிவித்துள்ளது.
2 வருடங்களுக்கு முன்னர் அடையாளம் தெரியாத 33 வயதான கோடீஸ்வரி ஒருவர் தனக்குப் பொருத்தமான கணவர் வேண்டும். அவருக்கு 330 மில்லியன் அமெரிக்க டொலர் (சுமார் 4317 கோடி ரூபா) பணம் தருவதாகவும் விளம்பரப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.
Average Rating