(PHOTOS) உறைய வைக்கும் குளிரில், உள்ளாடையுடன் அறப்பணி ஓட்டம்!

Read Time:1 Minute, 44 Second

3408thumஅறப்பணிக்காக நிதி சேகரிக்கும் குழுவொன்று, உறைய வைக்கும் கடும் குளிரில் அண்மையில் உள்ளாடையுடன் ஓடி ஆச்சரியப்படுத்தியுள்ளனர்.

கனடாவில் கடும் பனியை பொருட்படுத்தாது உறைய வைக்கும் குளிரை எதிர்கொண்டு இந்த மகிழ்ச்சிகரமான ஓட்டத்தில் சுமார் 70 பேர் கலந்துகொண்டு 3 கிலோ மீற்றர் பனிப்பிரதேசத்தில் ஓடியுள்ளனர்.

வருடாந்த ‘டொரொன்டோ சன்டா ஸ்பீடோ’ என அழைக்கப்படும் இந்த ஓட்டம் இம்முறை 8ஆவது தடவையாக கடந்த சனிக்கிழமை கனடாவில் நடைபெற்றுள்ளது.

இந்த ஓட்டத்தின் மூலம் திரட்டப்படும் பணத்தினை கிறிஸ்மஸ் பண்டிகைகையின்போது நோய்வாய்ப்பட்டு டொரொன்டோ வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் குழந்தைகளுக்கான பொம்மைகள் மற்றும் பண்டிகை கொண்டாட்ட நடவடிக்கைகளுக்காக செலவு செய்யப்படுகிறது.

இம்முறை இந்த அறப்பணி ஓட்டத்தினூடாக 32,000 அமெரிக்க டொலர்களுக்கும் (சுமார் 42 இலட்சம் ரூபா) அதிகமான நிதி திரட்டப்பட்டுள்ளது. குறித்த அறப்பணி ஓட்டம் கடந்த 2005ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது முதல் 250,000 அமெரிக்க டொலர் (சுமார் 3 கோடியே 27 இலட்சம் ரூபா) நிதி சேகரிக்கப்பட்டுள்ளது.

34082
34081

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post (PHOTOS) அழகுராணியின் கணினியை ஊடுருவி, நிர்வாணப்படங்களை பிடித்த இளைஞன்
Next post இராவணன் தமிழனா? சிங்களவனா? மேர்வின் -யோகேஸ்வரன் எம்.பி.க்கிடையில் விவாதம்