அமெரிக்காவின் மெகா ஜாக்பாட் லாட்டரி: ரூ.4 ஆயிரம் கோடிக்கான இரண்டு எண்கள் அறிவிப்பு
அமெரிக்க வரலாற்றிலே இரண்டாவது மிகப்பெரிய தொகையான 636 மில்லியன் டாலர் பரிசுத்தொகைக்கான (இந்திய மதிப்பில் சுமார் ரூ.4 ஆயிரம் கோடி) ஜாக்பாட் லாட்டரி குலுக்கல் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. முதல் பரிசுக்குரிய 7 இலக்கம் கொண்ட இரண்டு எண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இந்த அதிர்ஷ்டத்திற்கு உரிய எண்கள் 8, 14, 17, 20 மற்றும் 8, 14, 17, 39 ஆகும்.
இந்த லாட்டரி சீட்டுகளில் ஒன்று கலிபோர்னியாவின் சான் ஜோசிலுள்ள ஜெனிபர் கிப்ட் ஷாப்பிலும், மற்றொரு சீட்டு ஜார்ஜியாவிலுள்ள அட்லாண்டாவிலும் விற்பனை செய்யப்பட்டுள்ளது. ரூ.3 ஆயிரத்து 941 கோடிக்கான இந்த பரிசுத்தொகை இருவருக்கும் பிரித்துக் கொடுக்கப்படும். அந்த அதிர்ஷ்டசாலிகள் யார் என்பது விரைவில் தெரியவரும்.
முன்பு 586 மில்லியன் டாலர் பரிசுக்காக விற்பனை செய்யப்பட இருந்த இந்த ஜாக்பாட் குலுக்களின் டிக்கெட் விரைவில் விற்றுத்தீர்ந்ததால், அதன் தொகையானது 636 மில்லியன் டாலருக்கு உயர்த்தப்பட்டது.
கடந்த ஆண்டு குலுக்கப்பட்ட 656 மில்லியன் டாலருக்கான (ரூ.4 ஆயிரத்து 65 கோடி) ஜாக்பாட் தொகையே அமெரிக்காவின் அதிகபட்ச ஜாக்பாட் லாட்டரியாக இருந்து வருகிறது. இந்த தொகையானது அப்போது 3 எண்களுக்கு பிரித்து கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Average Rating