மலேசிய விடுதலைப் புலிகள் சந்தேக நபர் கைது
புலிகளின் ஆதரவாளர்கள் மலேசிய மக்கள் மத்தியில் வன்முறைகள் மீதான நம்பிக்கையை ஏற்படுத்த முயற்சிப்பதாக, மலேசிய காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மலேசிய காவற்துறை மா அதிபர் டான் சிரி காலிட் அபுபக்கர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன் அடிப்படையிலேயே நேற்று முன்தினம் புலிகளுக்கு ஆதரவான அரச சார்பற்ற நிறுவனம் ஒன்று ஏற்பாடு செய்திருந்த நிகழ்வினை தாங்கள் சுற்றி வளைத்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த சுற்றி வலைப்பின் போது ஒருவர் கைது செய்யப்பட்டதுடன், மேலும் ஆறு பேர் சரணடைந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்டவர் தடுத்து வைத்து விசாரணை செய்யப்படுகிறார்.