உயரமான கிறிஸ்மஸ் மரத்துடன் கிளிநொச்சியில் மாபெரும் நிகழ்வு

Read Time:2 Minute, 24 Second

1962432148450கிளிநொச்சியில் மாபெரும் கிறிஸ்மஸ் பண்டிகை நிகழ்வொன்று பாதுகாப்புப் படையினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி இன்று முதல் எதிர்வரும் 22 ம் திகதி வரை இந்த நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.

கடந்த 30 ஆண்டுகளாக இடம்பெற்ற யுத்த சூழ்நிலைகளால், இந்தப் பகுதிகளில் எந்தவொரு கலாசார மற்றும் சமய நிகழ்வுகளும் இடம்பெற முடியாமல் போனது.

இந்தநிலையில் 2013ம் ஆண்டுக்கான இந்த கிறிஸ்மஸ் நிகழ்வுகள் இந்தப் பகுதியில் இடம்பெறும் மாபெரும் சமய, கலாசார நிகழ்வாக இருக்கும் என கருதப்படுகின்றது.

நாட்டிலேயே மிக உயரமான மற்றும் பெரிய கிறிஸ்மஸ் மரம் இதற்காக அமைக்கப்பட்டுள்ளமை இந்த நிகழ்வின் மற்றுமொரு முக்கிய விடயமாகும். இது ஆசியாவிலேயே மிக உயரமான கிறிஸ்மஸ் மரமாகவும் அமையவுள்ளது.

116 அடி உயரம் கொண்ட இந்த சிறப்பு வாய்ந்த கிறிஸ்மஸ் மரத்தை அமைப்பதற்காக, 75க்கும் மேற்பட்ட படையினர் இரவு பகலாக உழைத்தனர்.

50 அடி விட்டமும் 116 அடி அகலமும் கொண்டதாகவும், 59,000 மின் குழிழ்களை கொண்டதாகவும் வண்ணமயமாக இது அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் பொதுமக்களுக்காக இன்று முதல் 31ம் திகதி வரை இது காட்சிப்படுத்தப்படும்.

மேலும் இந்த கிறிஸ்மஸ் நிகழ்வில், கரோல் கீதங்கள் இசைக்கப்படவுள்ளதோடு, 689 கிளிநொச்சி மாணவர்களுக்கான புலமைப் பரிசில்கள், ஒரு மில்லியன் பெறுமதியான இறக்குமதி செய்யப்பட்ட 3 பந்தைய சைக்கிள்கள் வழங்கப்படவுள்ளதோடு, மாபெரும் இசை நிகழ்ச்சிகளும் இடம்பெறவுள்ளன.

மேலும் இந்த நிகழ்வில், பிரபல ஆயர்கள் மற்றும் சர்வமத தலைவர்களும் கலந்துகொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தீவிர மன அழுத்த நோயில் சந்தன காமெடியர்!
Next post நடிகர் சஞ்சய் தத்துக்கு சிறையில் மது?