10 ஆம் வகுப்பு மாணவியைக் கர்ப்பமாக்கிய பாதிரியார் சரண்

Read Time:4 Minute, 4 Second

010இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம் நெல்லை அருகே பேட்டையில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் பாதிரியாராக இருப்பவர் செல்வன். கடந்த 2010 இல் இவர் அங்கு பணிக்கு வந்தார்.

அந்த நிர்வாகத்திற்கு உட்பட்ட பள்ளியில் அந்தப் பகுதியைச் சேர்ந்த ஒரு கூலி தொழிலாளியின் மகள் 10 ஆம் வகுப்பு படித்து வந்தார். 15 வயதுடைய அந்த மாணவி, பாதிரியாரிடம் பாட்டு பயின்று வந்தாள்.

அந்த மாணவியிடம் ஆசை வார்த்தைகள் சொல்லிய பாதிரியார், மாணவியை பலாத்காரம் செய்துள்ளார். இதில் மாணவி கர்ப்பமுற்றார்.

சில தினங்களில் மாணவியின் உடலில் மாற்றம் ஏற்படுவதை கண்ட அவரது தாய் விசாரித்துள்ளார். பாதிரியார் தான் தன்னை பலாத்காரம் செய்ததாக கூறியிருக்கிறார்.

உடனே பெற்றோர்கள் பாதிரியாரிடம் முறையிட்ட போது அவர்களை சமாளித்த பாதிரியார் கருகலைப்பு செய்வதற்காக பணம் கொடுத்துள்ளார்.

பின்னர் தனியார் மருத்துவமனை மருத்துவர் ஒருவரிடம் 5 மாத கருவை கலைக்க செய்து, அந்த சிசுவை கல்லறையில் உள்ள தோட்டத்திலேயே புதைத்து விட்டதாக கூறப்படுகிறது. இதனிடையே இந்த விவகாரம் அக்கம் பக்கத்தினருக்கு தெரியவர அவர்கள் பிரச்சனையை கிளப்பியபோது தகவல் போலீசார் வரை சென்றது.

மாணவியின் பெற்றோரிடம் போலீஸ் விசாரித்தது. அவர்களிடம் புகார் வாங்கியது போலீஸ். அதன் அடிப்படையில் மகளிர் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் விமலா, பாதரியார் செல்வம் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார்.

இதையடுத்து பாதரியார் தலை மறைவானார். மேலும் அந்த சிசுவை தோண்டி எடுப்பதற்கு அதிகாரிகள் உதவியோடு வெள்ளிக்கிழமை காலை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அரசு மருத்துவர் செல்வமுருகன், தாசில்தார் பாலசுப்பிரமணியம் முன்னிலையில் சர்ச்சின் கல்லறை தோட்டத்தில் வியாழக்கிழமை காலை 11 மணி அளவில் தோண்டப்பட்டது.

ஒன்றரை அடி ஆழத்திற்கு கீழே ஒரு பிளாஸ்டிக் பாக்கெட்டில் சில சதை துண்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதை அங்கேயே சோதனை செய்த டாக்டர், டிஎன்ஏ சோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இதுதொடர்பாக பேட்டை காவல்நிலைய ஆய்வாளர் விஜயகுமார் மற்றும் பெண் ஆய்வாளர் விமலா ஆகியோர் தலைமறைவான பாதரியாதை தேடி வந்தனர்.

இதற்கிடையே போலீசாரால் தேடப்பட்ட பாதிரியார் செல்வன், தேனி மாவட்டம் உத்தமபாளையம் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வெள்ளிக்கிழமை சரண் அடைந்தார்.

அவரை வருகிற 26 ஆம் தேதி நெல்லை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தவும், அதுவரை மதுரை மத்திய ஜெயிலில் அடைக்கவும் மாஜிஸ்திரேட்டு கீதா உத்தரவிட்டார்.

இதைத் தொடர்ந்து பாதிரியார் செல்வனை மதுரை மத்திய ஜெயிலில் போலீசார் அடைத்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஈரானுக்கு எதிராக: ஒபாமாவும் வீட்டோவும்..
Next post மலையாள ஹீரோக்களின் பேவரைட் ஆனார் ஜனனி அய்யர்..!