By 25 December 2013 0 Comments

(PHOTOS) 2013 – ஹீரோயின்கள்: -அவ்வப்போது கிளாமர்-

17-sridivya-nayantar2013ம் ஆண்டைப் பொறுத்தவரை பல முன்னணி நடிகைகளுக்குப் படங்களே இல்லை… சிலர் எடுபடாமல் போனார்கள். ஆனால் நயன்தாரா மட்டும் ஒரு ஆண்டு இடைவெளிக்குப் பிறகு வந்தாலும் அவருக்கான முதலிடம் தமிழில் அப்படியே இருப்பது ஆச்சர்யம்தான். இந்த ஒரு ஆண்டில், தங்கள் மார்க்கெட்டை நிலையாக வைத்துக் கொண்டவர்கள் காஜல் அகர்வாலும், ஹன்சிகாவும்தான். இருவருக்கும் பெரிய வெற்றிப் படங்கள் அமையாவிட்டாலும், அவர்களுக்கான வாய்ப்புகள் குறையவில்லை.

அமலா பால் 
அமலா பால் பெரிய அளவுக்கு எதிர்ப்பார்த்த படம் விஜய்யின் தலைவா. ஆனால் அது விஜய்க்கு பெரிய அவமானமாகவும், அமலா பாலுக்கு பெரும் சரிவாகவும் அமைந்துவிட்டது. இப்போது ஜெயம் ரவியுடன் நிமிர்ந்து நில், தனுஷுடன் வேலையில்லா பட்டதாரி படங்களில் நடித்து வருகிறார். இந்தப் படங்களைத்தான் ரொம்ப நம்பியிருக்கிறார். 

த்ரிஷா
த்ரிஷாவுக்கு சினிமாவில் இது 11-வது ஆண்டு. இப்போதும் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மூன்று மொழிகளில் தலா ஒரு படத்தை கையில் வைத்துள்ளார். தவிர, எப்போதும் செய்திகளில் இருந்து கொண்டே இருப்பதால், சினிமா தவிர்த்த பல வாய்ப்புகளும் அவரைத் தேடி வருகின்றன. இதுவே பெரிய சாதனைதான். 

அனுஷ்கா
அனுஷ்காவுக்கு அலெக்ஸ் பாண்டியன் பெரிய தோல்விப் படமாக அமைந்தது. ஆனால் சிங்கம் 2 பெரிய வெற்றியாக அமைந்தது. அடுத்து வந்த இரண்டாம் உலகம் சொதப்பிவிட்டது. மேலும் அவரது தோற்றம் வேறு, கொஞ்சம் ஆன்ட்டி ரேஞ்சுக்குப் பக்கத்தில் வந்துவிட்டதால், இனி தமிழில் கஷ்டம். ஆனால் ‘ருத்ரமாதேவி’, பாஹுபலி என ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வருவதால், தெலுங்கில் இப்போதும் இவர்தான் டாப் நடிகை.

அஞ்சலி 
அஞ்சலிக்கு இந்த ஆண்டு உண்மையிலேயே சிறப்பாக வந்திருக்கும், சித்தி சர்ச்சை மற்றும் ஆந்திராவுக்கு அவர் தப்பியோடாமல் இருந்திருந்தால். கிட்டத்தட்ட அரை டஜன் பெரிய பட வாய்ப்புகளை அவர் இழந்துவிட்டார். அந்த வாய்ப்புகளை ஸ்ரீதிவ்யா உள்ளிட்டோர் பெற்று வருகின்றனர்.

நஸ்ரியா 
ஒரு படம் கூட வெளியாகாத நிலையில், நஸ்ரியாவுக்கு பெரிய வரவேற்பு தமிழில் கிடைத்தது. நேரம், ராஜா ராணி படங்களில் அவரைப் பாராட்டித் தள்ளினார்கள், மீடியா உள்பட. ஆனால் நய்யாண்டியில் அவரது சுயமுகம் தெரிந்த பிறகு மதிப்பிழந்து போனார். திருமணம் எனும் நிக்கா, ஜீவா படங்களில் மட்டும் நடித்து வருகிறார்.

நயன்தாரா 
நயன்தாரா இந்த வருடமும் தமிழ், தெலுங்கில் நம்பர் ஒன் ஹீரோயினாக இருக்கிறார். காதல் சர்ச்சைகளால் ஒரு வருடம் இடைவெளி விட்டு வந்தாலும் நயனுக்கு அதே மவுசு இருப்பதுதான் குறிப்பிடத்தக்கது. ஆர்யாவுடன் ஜோடி சேர்ந்த ‘ராஜா ராணி’ படம் வெற்றிகரமாக ஓடி வசூல் குவித்தது. அஜீத்துடன் நடித்த ‘ஆரம்பம்’ படமும் ஹிட்டானது.

விருதுகள்…
தற்போது தமிழ், தெலுங்கில் தயாராகும் ‘அனாமிகா’ படத்தில் கர்ப்பிணி வேடத்தில் நடிக்கிறார். இது இந்தியில் வித்யாபாலன் நடித்து பரபரப்பாக ஓடிய ‘கஹானி’ படத்தின் ‘ரீமேக்’. கோடிகளில் சம்பளம் வாங்கும் நயன்தாராவுக்கு, இந்தப் படத்தின் மூலம் விருதுகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உதயநிதி ஜோடியாக ‘இது கதிர்வேலன் காதல்’ படத்திலும் நடிக்கிறார். சிம்பு படம் உள்பட மேலும் மூன்று படங்களில் நடிக்கும் அளவுக்கு பிஸியாக இருக்கிறார்.

ஸ்ரீதிவ்யா 
வருத்தப்படாத வாலிபர் சங்கம் மூலம் ஓவர் நைட்டில் டாப் இடத்துக்கு வந்துவிட்டார் ஸ்ரீதிவ்யா. இப்போது ‘பென்சில்’. ‘வீர தீர சூரன்’, ‘ஈட்டி’ உள்பட ஆறு படங்களைக் கையில் வைத்திருக்கிறார். இந்த ஆண்டின் பளிச் ஹீரோயின், அடுத்த ஆண்டின் டாப் ஹீரோயின் வர்ணிக்கப்படுகிறார் இந்த ஊதாக் கலரு ரிப்பன்.

ப்ரியா ஆனந்த்
இவர்களைத் தவிர, ஓவியா, ப்ரியா ஆனந்த் ஆகியோரும் ஓரளவு வாய்ப்புகளை கையில் வைத்துள்ளனர். ஆனால் தமன்னா, ஸ்ருதி, இலியானா, சமந்தா, அஞ்சலி போன்றோருக்கு தமிழில் இந்த ஆண்டு படங்களே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.Post a Comment

Protected by WP Anti Spam