நானாட்டான் பிர­தேச செய­லகம் மீது தாக்­குதல்: 21பேரும் பிணையில் விடுதலை

Read Time:4 Minute, 27 Second

judge-001மன்னார், நானாட்டான் பிர­தேச செய­லகம் மீது தாக்­குதல் நடத்­திய குற்­றச்­சாட்டின் பேரில் கைது­செய்­யப்­பட்டு விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டி­ருந்த 21 பேரை நேற்று மன்னார் நீதிவான் செல்வி ஆனந்தி கன­க­ரட்ணம் பிணையில் விடு­வித்­துள்ளார்.

தலா 10 ஆயிரம் ரூபா ரொக்கப் பிணை­யிலும் 50 ஆயிரம் ரூபா பெறு­ம­தி­யான சரீரப் பிணை­யிலும் இவர்­களை விடு­வித்த நீதிவான் இரு சமூ­கங்­க­ளி­டை­யேயும் மீளவும் குழப்­ப­நிலை ஏற்­ப­டு­மானால் பிணை இரத்­துச்­செய்­யப்­படும் என்றும் எச்­ச­ரிக்கை விடுத்­துள்ளார்.

மன்னார் நானாட்டான் பிர­தேச செய­லகப் பிரி­வி­லுள்ள பொன்­தீவுக் கண்டல் கிராம அலு­வ­லகப் பிரிவில் மீள்­கு­டி­யேற்­றத்­துக்­கான காணி பகிர்ந்­த­ளித்­தலில் ஏற்­பட்ட பிணக்­கு­களைத் தொடர்ந்து கடந்த 9ஆம் திகதி நானாட்டான் பிர­தேச செய­ல­கத்தை சுற்­றி­வ­ளைத்த மக்கள் பிர­தேச செய­லா­ள­ருடன் பேச முயன்­றனர். அந்த முயற்சி கைகூ­டா­த­தை­ய­டுத்து பிர­தேச செய­ல­கத்­தின்­மீது தாக்­குதல் நடத்­தி­யி­ருந்­தனர்.

இந்தச் சம்­ப­வத்­தை­ய­டுத்து 33 பெண்­களும் 32 ஆண்­க­ளு­மாக 65 பேர் பொலி­ஸாரால் கைது­செய்­யப்­பட்டு நீதி­மன்றில் ஆஜ­ராக்­கப்­பட்­டனர். இவர்­களில் 18 பேரைத்­த­விர ஏனை­ய­வர்கள் பிணையில் விடு­விக்­கப்­பட்­டி­ருந்­தனர். 18 பேருக்கு விளக்­க­ம­றியல் உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டி­ருந்­தது. இத­னை­விட மூவர் கடந்­த­வாரம் நீதி­மன்றில் சர­ண­டைந்­த­தை­ய­டுத்து அவர்­களும் விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டி­ருந்­தனர்.

இந்த 21 பேரும் நேற்று நீதி­மன்றில் ஆஜ­ராக்­கப்­பட்­ட­போது சட்­டத்­த­ர­ணி­க­ளான திரு­அருள், எஸ். பிரிமூஸ் சிராய்வா, செப­நேசன் லோகு, அஜித் யோன் தாசன் ஆகி­யோ­ருடன் சட்­டத்­த­ரணி அன்டன் புனி­த­நா­யகம் ஆஜ­ராகி வாதா­டினார். 21 பேரையும் தொடர்ந்து விளக்­க­ம­றி­யலில் வைத்­தி­ருப்­ப­தா­னது இரு சமூ­கங்­க­ளி­டை­யேயும் மேலும் முரண்­பாட்­டினை ஏற்­ப­டுத்­தவே உதவும். அத்­துடன் நத்தார் பண்­டி­கையும் வரு­வ­தனால் இவர்­களை பிணையில் விடு­விக்க வேண்டும் என்று அவர் கேட்­டுக்­கொண்டார்.

இதன்­போது கருத்துத் தெரி­வித்த நீதிவான், பிர­தேச செய­ல­கத்தில் ஒரு இலட்­சத்து 63 ஆயிரம் ரூபா சேதம் ஏற்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. 25 ஆயிரம் ரூபா­வுக்கு மேற்­பட்ட அரச சொத்­துக்கள் சேத­மாக்­கப்­பட்டால் மேல் நீதி­மன்­றத்­தி­லேயே பிணை வழங்­கப்­பட வேண்டும்.

பொலிஸார் ஆட்சே­பனை தெரி­விக்­க­வில்லை என்றால் பிணை வழங்­கு­வது குறித்து நீதிவான் நீதி­மன்றம் தீர்­மா­னிக்­கலாம். பொலிஸார் ஆட்­சே­பனை தெரி­விக்­கா­மை­யினால் இவர்­களைப் பிணையில் விடு­விக்­கின்றேன்.

எதிர்காலத்தில் பிரச்சினை எதுவும் ஏற்படுமானால் பிணை ரத்துச்செய்யப்பட்டு மேல் நீதிமன்றத்துக்கு வழக்கை பாரப்படுத்தும் நிலை ஏற்படும் என்று எச்சரித்ததுடன் 21 பேரையும் பிணையில் விடுவித்தார்.

இதனையடுத்து வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தேவயானி மீதான வழக்கை திரும்ப பெற வேண்டும்: அமெரிக்கவாழ் இந்தியர்கள் கோரிக்கை
Next post கனடாவில் கடும் பனிப்புயல்: 11 பேர் பலி