-ஜூன் 19- தியாகிகள் தினம்

Read Time:7 Minute, 51 Second

Eprlf.naba.jpgஇத்தினத்தில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி – பத்மநாபா தமிழ் சமூகத்தின் சுதந்திரத்திற்காகவும், ஜனநாயகம், மனித உரிமைக்காகவும், சகல சமூகங்களுடனும் சகோதரத்துவத்துக்காகவும், சர்வதேச நட்புறவுக்காகவும் மரணித்;;த தோழர்கள் போராட்டக்காரர்கள் பொதுமக்கள் அனைவரையும் நினைவு கூருகிறது. இவர்களுக்கு சிரந்தாழ்ந்து தனது இதய அஞ்சலியை தெரிவித்துக் கொள்கிறது. கடந்து வந்த கால்நு}ற்றாண்டில் சமூகத்தின் சகல தளங்களிலும் மறுமலர்ச்சி ஏற்பட வேண்டும் என்ற இலட்சிய கனவுகளுடன் போராடியவர்களின் அபிலாஷைகள் சர்pயானவை என்பதை வரலாறு நிரூபித்துக் கொண்டு வருகிறது.

1987 இல் இலங்கை- இந்திய ஒப்பந்தத்தை ஏற்று செயற்பட முற்பட் டது எத்தகைய தீர்க்கதரிசனமிக்க நடவடிக்கை என்பது இப்போது ஐயம் திரிபுற நிரூபிக்கப்பட்டுள்ளது. புலிகளின் ஜனநாயக விரோத செயற்பாடுகள் தமிழ் மக்களையும் இலங்கையின் அனைத்து மக்களையும், நரகப்படுகுழிக்குள் தள்ளும் என்பதை முன் உணர்ந்து செயற்பட்டது, தற்போது உலகளாவியளவில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

1986 இல் மாற்று அரசியல் இயக்கங்களை புலிகள் தடை செய்தார்கள். 20 ஆண்டுகளின் பின் தற்போது உலகம் அவர்களை தடை செய்துவிட்டது. புலிகளின் ஜனநாயக விரோத சகிப்புத்தன்மையற்ற செயல்பாடுகளின் உச்ச விளைவாகவே இது நிகழ்ந்துள்ளது.

நாங்கள் ஐக்கிய இலங்கைக்குள் நியாயமான தீர்விற்காக இற்றைக்கு 18 ஆண்டுகளுக்கு முன்னர் முயற்சிகளை மேற்கொண்டபோது அதனை அலட்சியம் செய்து, எள்ளி நகையாடி, காட்டிக்கொடுத்து அதிகாரப் பகிர்வு முன்னெடுப்பை கருவிலேயே சிதைத்தார்கள். அன்றைய பிரேமதாசா அரசும் புலிகளும் இந்த முயற்சியில் கூட்டமைத்துக் கொண்டார்கள்.

இன்று ஐக்கிய இலங்கைக்குள் இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண்பதற்கு சகல தரப்புக்களும் உடனடியாக செயல் நடவடிக்கைகளில் இறங்க வேண்டும் என்று உலகம் சொல்கிறது.

புலிகள் கடந்த இரண்டு தசாப்தங்களாக தம்மை தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகள் என்று கூறிக்கொண்டு மாற்று கருத்தாளர்களை, மாற்று அரசியல் சக்திகளை உடல் மீதியின்றி அழித்தொழித்து வந்திருக்கிறார்கள். இன்று புலிகள் தமிழ் மக்கள் ஏகபிரதிநிதிகள் இல்லை என்று உலகம் சொல்கிறது.

நாம் இந்திய- இலங்கை ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டதற்காக அதனை செயற்படுத்த முனைந்ததற்காக இந்தியாவின் மாபெரும் நட்பை நாங்கள் பெறுமதிவாய்ந்த விடயமாக கருதியதற்காக எம்மையும் எமது தோழர்களையும் துரோகிகள் என்றவர்கள் இன்று இந்தியா தலையிட வேண்டும் என்கிறார்கள். வரலாற்றில் நாங்கள் சரியான தீர்மானங்களை சரியான சந்தர்ப்பங்களில் எடுத்திருக்கிறோம். அந்தத் தீன்மானங்களுக்காக எமது தோழர்கள் தமது உயிரை அர்ப்பணித்திருக்கிறார்கள்.

கியூபாவின் தலைவர் 1950களின் இறுதிப்பகுதியில் நிகழ்ந்த புரட்சியின் போது பற்றிஸ்டாவின் இராணுவத்தால் கைது செய்யப்பட்டு இராணுவ நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டபோது வரலாறு என்னை விடுதலை செய்யும் என்றோ ஒருநாள் எமது தோழர்கள் புதைகுழியில் இருந்து சுமந்துவரப்படுவார்கள் என்று குறிப்பிட்டிருந்தார். எங்களை வரலாறு விடுதலை செய்துகொண்டிருக்கிறது.

தோழர்களே படுகொலை செய்யப்பட்ட எமது தோழர்கள் வரலாற்றின் கண்ணியமாக இடைவெளிகளில் வைக்கப்பட வேண்டும். ஏனெனில் அவர்கள் உயரிய இலட்சியங்களுக்காக போராடியவர்கள்.

தமிழர் இயக்கங்களிடையே ஐக்கியத்திற்காகவும், சிங்கள முற்போக்கு சக்திகளுடன் உறவை வலுப்படுத்துவதிலும், மலையகத்தின் மறுமலர்ச்சியிலும் இந்தியாவுடன் நட்பிலும், சர்வதேச விடுதலை ஸ்தாபனங்களுடன் கரம் கோர்ப்பதிலும் எமது தோழர் பத்மநாபா ஒரு வரலாற்றுப் பாத்திரத்தை ஆற்றியிருந்தார். அந்த வழியில் தான் எமது தோழர்கள் செயற்பட்டனர்.

துரதிஸ்டவசமாக எமது சமூகத்தில் உருவாகிய உன்னத தலைவர்களை எல்லாம் குறிப்பாக தமிழ் பாசிசமும், சிங்கள மேலாதிக்கவாதமும் அழித்தொழித்து விட்டன. நாம் வெற்றிடத்தில் இருந்து விடயங்களை ஆரம்பிக்க வேண்டும் என்ற அளவிற்கு மோசமான ஓர் அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்.

தன்னம்பிக்கையுடனும், ஆளுமையுடனும் சமூகத்தினுள் புதிய தலை முறை ஒன்று பீறிட்டு எழுவதற்கான நிலைமைகள் எல்லாம் நிர்மூலம் செய்து அப்பட்டமான ஈவிரக்கமற்ற பயங்கரவாதத்தை மாத்திரம் புலிகள் எமது சமூகத்தில் பிரதியீடு செய்துள்ளனர். அதனால் சமூகத்தின் சகல அரசியல், கலாச்சார பொருளாதார விழுமியங்களும் மனிதாபிமான ஜனநாயக விழுமியங்களும் அழித்தொழிக்கப்பட்டு ஒரு நடைப்பிண சமூக நிலை தோற்றுவிக்கப்பட்டுள்ளது.

தோழர்களே! தியாகிகளான எமது தோழர்கள் விட்டுச்சென்ற வளமான இலட்சியங்கள் எம்மிடம் இருக்கின்றன. துவண்டுபோய் கிடக்கும் எமது சமூகத்தில் மனித நாகாPகத்தை பறை சாற்றி நாம் மீளெழுவோம். அதிகாரம் ஒன்றை நிறுவுவதற்காக அல்ல. ஜனநாயகமான மனித வாழ்வொன்றை கட்டியெழுப்புவதற்கு.

நாம் இதனை தனியாக செய்துவிட முடியாது. அப்படி சிந்திப்பதும் ஜனநாயக விரோதமாகும். மற்றவர்களுடன் தோளோடு தோள் நின்று ஜனநாயக உணர்வுடன் ஐக்கியமாக நாம் எமது இலட்சியங்களை முன்னெடுக்க வேண்டும். இதுவே நாம் மறைந்த தோழர்களுக்கும் போராட்டகக்காரர்களுக்கும், பொது மக்களுக்கும் செய்யும் இதயபூர்வமான அஞ்சலியாக இருக்க முடியும்.

ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி – பத்மநாபா
(EPRLF- Pathmanabha)
EPRLF.martyrs_day_2006.jpg

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post வெடிகுண்டு தொழிற்சாலை தகர்ப்பு: ஆப்கானிஸ்தானில் 85 தலிபான் தீவிரவாதிகள் சுட்டுக்கொலை
Next post சீன வான்வெளியில் செல்ல இந்திய ராணுவ விமானத்துக்கு சீன அரசு அனுமதி