By 26 December 2013 0 Comments

ஸ்ரீதேவி வீட்டை திருப்பி தர பிரபுதேவா முடிவு

prabhu-sriதீ விபத்தால் வீட்டை காலி செய்து ஸ்டார் ஓட்டலில் தங்கி இருக்கும் ஸ்ரீதேவிக்கு அவரது மற்றொரு வீட்டை திருப்பி தருவதாக கூறினார் பிரபுதேவா.

பாலிவுட் படங்களை இயக்கி வரும் பிரபுதேவா, மும்பையில் அந்தேரி பகுதியில் உள்ள ஸ்ரீதேவிக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பு வீட்டில் வாடகைக்கு இருந்து வருகிறார்.

ஸ்ரீதேவி தனக்கு சொந்தமான மற்றொரு பங்களாவில் குடும்பத்துடன் தங்கி இருக்கிறார். சமீபத்தில் ஸ்ரீதேவி தங்கி இருந்த பங்களாவில் மின்சார கோளாறு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது.

மின் இணைப்புகள் முற்றிலுமாக நாசமானதால் பங்களா இருளில் மூழ்கியது. இதையடுத்து மகள் ஜான்வியின் தோழி வீட்டில் ஸ்ரீதேவி குடும்பத்தினர் தங்கினர். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு ஸ்ரீதேவியும், போனிகபூரும் பைவ் ஸ்டார் ஓட்டல் ஒன்றில் அறை எடுத்து தங்கி வருகின்றனர்.

மகள்கள் மற்றும் போனிகபூரின் தாயார் உறவினர் வீட்டில் தங்கி உள்ளனர். இதையடுத்து பிரபுதேவா, ஸ்ரீதேவியை தொடர்பு கொண்டு, நான் வேறு வீடு பார்த்துக்கொள்கிறேன். நீங்கள் வந்து நான் தங்கி இருக்கும் குடியிருப் பில் தங்கிக்கொள்ளுங்கள் என்றார்.

இதுபற்றி போனிகபூரிடம் கேட்டு சொல்வதாக ஸ்ரீதேவி தெரிவித்திருக்கிறார். ஸ்ரீதேவி வீட்டில் நடந்த தீ விபத்தில் மகள் ஜான்வி தங்கி இருந்த பெட்ரூம் முழுமையாக எரிந்து நாசமாகிவிட்டது.

அத்துடன் ஸ்ரீதேவி வரைந்து வைத்திருந்த மைக்கேல் ஜாக்சன் பெயின்டிங்கும் தீயில் கருகி யது. இந்த ஓவியத்தை மைக்கேல் ஜாக்சன் இறந்த போது அவரது நினைவாக மகள் ஜான்விக்கு ஸ்ரீதேவி பரிசாக அளித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விபத்தில் ஜான்வியின் விலை உயர்ந்த உடைகளும் எரிந்து போயின.



Post a Comment

Protected by WP Anti Spam