விவேக்கிற்கு ‘பசுமை காவலர்’ விருது

Read Time:1 Minute, 49 Second

Vivekமுன்னாள் ஜனா­தி­பதி அப்துல் கலாம் வேண்டுகோளுக்கினங’க நடிகர் விவேக் மர­க்கன்­று­களை நாட்டி சமூக பணி செய்து வரு­கிறார்.

இது­வ­ரையில் 21 லட்­சத்து 50 ஆயிரம் மரக்­கன்­று­களை நாட்டி சாதனை படைத்­துள்ளமையால் விவேக்கிற்கு ‘பசுமை காவலர்’ விருது வழங்­கப்­பட்­டுள்­ளது.

சென்னை அண்­ணா­சா­லையில் உள்ள காஸ்மோ பாலிடன் கிளப்பில் நேற்­று­முன்­தினம் இரவு நடை­பெற்ற நூல் வெளி­யீட்டு விழாவின் போதே இவருக்கு பசுமை காவலர்’ என்ற விருதை நீதி­பதி ப.ஜோதி­மணி வழங்­கினார்.

நடிகர் விவேக் இது தொடர்பில் கருத்து தெரி­விக்­கையில் ”முன்னாள் ஜனா­தி­பதி அப்­துல்­க­லாமின் அன்பு வேண்­டு­கோ­ளின்­படி தமிழ்­நாட்டில் மரக்­கன்­று­களை நட்டு வரு­கிறேன்.

இது­வரை 21 லட்­சத்து 50 ஆயிரம் மரக்­கன்­று­களை நட்டு முடித்­துள்ளேன். 1 கோடி மரக்­கன்­று­களை நட வேண்டும் என்று அப்­துல்­கலாம் கூறி­யி­ருக்­கிறார்.

நான் மரக்­கன்­று­களை நடு­வதை ஊக்­கப்­ப­டுத்தி தேசிய பசுமை தீர்ப்­பாய உறுப்­பினர் நீதி­பதி ப.ஜோதி­மணி ‘பசுமை காவலர்’ விருது வழங்கியது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும்உள்ளது மற்றும் இந்த விருது எனக்கு மேலும் ஊக்கமளிக்கின்றது’ எனவும் குறிப்பிட்டார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சாவகச்சேரியில் பெண் ஒருவரை, ஐவர் இணைந்து பாலியல் வல்லுறவு
Next post 12 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய முதியவர் கைது