சீன வான்வெளியில் செல்ல இந்திய ராணுவ விமானத்துக்கு சீன அரசு அனுமதி

Read Time:1 Minute, 40 Second

China.Flag1.jpgசீன வான்வெளியில் செல்ல மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் முரளி தேவ்ரா சென்ற இந்திய விமானப்படை விமானத்துக்கு சீனா அனுமதி அளித்தது. சீனாவுடன் 1962-ல் நடந்த போருக்குப் பிறகு சீன வான் வெளியில் இந்திய விமானம் பறக்க அனுமதி அளித்துள்ளது இதுவே முதல் முறை. இது இந்தியா-சீனா இடையிலான நல்லுறவு மேம்பட்டுள்ளதற்கான அடையாளத்தைக் காட்டுவதாக உள்ளது.

கஜகஸ்தானில் அல்மாட்டி நகரில் நடைபெறவுள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங்கின் பிரதிநிதியாகப் பங்கேற்பதற்காக அமைச்சர் முரளி தேவ்ரா உள்பட 9 பேர் கொண்ட குழு பயணம் செய்தனர். இவர்கள் சீனாவில் ராணுவ விமான உற்பத்திக் கேந்திரமான செங்குடு நகரில் இரவில் தங்கிச் சென்றனர்.

2001-ல் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்கில் நடைபெற்ற விழாவுக்கு அப்போதைய பிரதமர் வாஜபேயி செல்வதற்காக சீன வான்வெளியில் பறந்து செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து அவர் ஈரான் வழியாக பீட்டர்ஸ்பர்க் நகருக்கு சுற்றுவழியில் செல்ல நேர்ந்தது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post -ஜூன் 19- தியாகிகள் தினம்
Next post வட கொரியா ஏவுகணை சோதனை நடத்தினால் பொருளாதார தடை : ஜப்பான்