புலிகளுக்கு ஆயும் விநியோகித்தவர், அமெரிக்க சிறையிலிருந்து விடுதலை

Read Time:1 Minute, 43 Second

usa-ltte-1புலிகளுக்கு ஆயுத விநியோகம் செய்ததாக கைது செய்யப்பட்டு, அமெரிக்காவில், நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை முடித்த, சிங்கப்பூர் சீர்திருத்த கட்சியின் இணை நிறுவனரான, ராகவன் என்கிற பால்ராஜ் நாயுடு, தாயகம் திரும்பி உள்ளார்.

சிங்கப்பூர் சீர்திருத்த கட்சியை நிறுவியவர்களில் ஒருவர் ராகவன், 51. விடுதலை புலிகளுக்கு ஆயுத வினியோகம் செய்ததாக, 2009ல் கைது செய்யப்பட்டார்.

கட்நத, 2006ம் ஆண்டு, விடுதலை புலிகளுக்கும், ஆயுத வியாபாரிகளுக்கும் இடையே, புரோக்கராக செயல்பட்டதாகவும், சிங்கப்பூரைச் சேர்ந்த, ஹனீபா உஸ்மான் என்பவருடன் சேர்ந்து, விடுதலை புலிகளுக்காக அமெரிக்காவிலிருந்து ஆயுதங்களை வினியோகம் செய்ததாகவும் ராகவன் மீது குற்றம் சாட்டப்பட்டது.

இந்த வழக்கில், ஏற்கனவே உஸ்மான் கைது செய்யப்பட்டு, அமெரிக்காவின், பால்டிமோர் நகர சிறையில், 37 மாத சிறை தண்டனை அனுபவித்தார்.

அமெரிக்க சிறையில், நான்கு ஆண்டு சிறை தண்டனையை முடித்த ராகவன், கடந்த 16ம் தேதி, சிங்கப்பூர் அரசிடம் ஒப்படைக்கப்பட்டார். இவர் மீண்டும், அமெரிக்கா வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அமெரிக்காவில் 110 மைல் வேகத்தில் கார் ஓட்டிய பிரபல விளையாட்டு வீரர் கைது
Next post “விபச்சாரியாக வேலை செய்ய பெண்கள் தேவை” அதிகாரப்பூர்வ விளம்பரத்தால் பரபரப்பு!!