By 31 December 2013 0 Comments

இறந்த பெண் குழந்தையை, வாயில் கவ்வி கொண்டு வந்த நாய்

007fஇந்திய தமிழகம், கோபியில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் வாய்க்கால் ரோடு ராமர் விரிவாக்கம் பகுதியில் உள்ள சாக்கடையில் ஒரு ஆண் குழந்தை பிணம் மிதந்தது. இந்த குழந்தை பிறந்து சில நாட்களாகத்தான் இருக்கும்.

இதுகுறித்து கோபி போலீசார் அந்த குழந்தையின் பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வந்தனர்.

அந்த குழந்தை யாருடையது? எப்படி சாக்கடையில் கிடந்தது? யாராவது தூக்கி வீசி விட்டு சென்றார்களா? கள்ளக்காதலில் பிறந்த குழந்தையா? என்று போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர்.

ஆனால் கடந்த 2 ஆண்டுக்கு மேலாகியும் அந்த குழந்தை யாருடையது? எப்படி சாக்கடையில் போடப்பட்டது? என்று இதுவரை தெரியவில்லை

இந்த நிலையில் கோபியில் மீண்டும் ஒரு குழந்தை பிணம் கிடந்த சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோபி சீதாலட்சுமிபுரம் தண்டுமாரியம்மன் கோவில் வீதியில் நேற்று மதியம் 2.30 மணி அளவில் அந்த பகுதியை சேர்ந்த சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக ஒரு நாய் தனது வாயில் ஏதோ ஒன்றை கவ்வி கொண்டு வந்தது.

கூர்ந்து பார்த்த போது, நாயின் வாயில் இருந்தது ஒரு குழந்தையின் பிணம் என்று தெரிய வந்தது. அதிர்ச்சி அடைந்த சிறுவர்கள், நாயை விரட்டி சென்றனர். அப்போது நாய் குழந்தையின் பிணத்தை போட்டு விட்டு ஓடியது.

இதுபற்றி அப்பகுதி பெரியோர்களுக்கு தெரிய வர அவர்களும் பதறியடித்தபடி வந்தனர். நாய் கவ்வி கொண்டு வந்தது பெண் குழந்தை பிணம். அந்த பெண் குழந்தையின் தலைப்பகுதி இல்லை. உடல் பகுதி முழுவதையும் நாய் கடித்து குதறி இருந்தது.

அந்த குழந்தை பிறந்து சில மணி நேரம்தான் ஆகி இருக்கும். சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் குழந்தையின் உடலை கைப்பற்றி கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த பெண் குழந்தையின் பிணம் கோபியில் எந்த பகுதியில் கிடந்தது? நாய் எங்கே இருந்து கவ்வி வந்தது? என்று தெரியவில்லை.

கோபி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கோபியில் கடந்த 2 ஆண்டுக்கு முன் ஒரு குழந்தை பிணம் கிடந்தது. அது யாருடைய குழந்தை… எப்படி வந்தது? என்று இன்னும் தெரியாத நிலையில் தற்போது மீண்டும் ஒரு குழந்தை பிணம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



Post a Comment

Protected by WP Anti Spam