வொஸ்னியாக்கி, ரொறி திருமண ஒப்பந்தம்
திருமணப்பந்தத்தில் இணைவதற்கு தாங்கள் இருவரும் புதுவருடத் தினத்தன்று தீர்மானித்ததாக முன்னிலை டென்னிஸ் வீராங்கனை கரோலின் வொஸ்னியாக்கியும் கோல்வ் வீரர் ரொறி மெக்இல்ரோயும் ட்விட்டர் இணையத்தளம் மூலம் அறிவித்துள்ளனர்.
புதுவருடத்தன்று தாங்கள் ஈட்டிய முதல் வெற்றியாக இதனை அவர்கள் இருவரும் கருதுகின்றனர்.
‘அனைவருக்கும் மகிழ்ச்சிகரமான புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த வருடம் மகத்தானதாக அமையப்போகின்றது என நான் உணர்கின்றேன். 2014இல் எனது முதலாவது வெற்றி’ என ரொறி மெக்இல்ரோய் தனது ட்விட்டரில் குறிப்பிட்டிருந்தார்.
‘என்னை மணமுடிக்க அவர் ஒப்புக்கொண்டார்’ எனவும் மெக்இல்ரோய் தெரிவித்திருந்தார்.
இதேபோன்ற ஒரு ட்விட்டர் செய்தியை அதற்கு மெக்இல்ரோய்க்கு முன்பதாக வொஸ்னியாக்கி வெளியிட்டிருந்தார்.
‘எல்லோருக்கும் புதுவருட வாழ்த்துக்கள். ரொறியும் நானும் 2014 ஆம் ஆண்டை இன்ப அதிர்ச்சியுடன் ஆரம்பித்தோம்….. நான் ஆம் என்றேன்!!!’ என வொஸ்னியாக்கி தனது ட்விட்டரில் குறிப்பிட்டிருந்தார்.
Average Rating