(வீடியோ) நாம் சொன்னதைக் கேட்டிருந்தால், இன்று பிரபாகரன் உயிருடன் இருந்திருப்பார்.. -ப.சிதம்பரம்

Read Time:2 Minute, 12 Second

ltte.leader-Prabakaranஇலங்கையில் இறுதிக்கட்டப் போரின் போது போரை நிறுத்த வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியது.

இந்திய அரசு சொன்னதைக் கேட்டிருந்தால் இன்றைக்கு விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் உயிரோடு இருந்திருப்பார் என்று மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

புதியதலைமுறை டிவியில் அக்னிப் பரிச்சை நிகழ்ச்சியில் பேசிய சிதம்பரம், இன்றைய அரசியல் நிலை, சிவகங்கை தொகுதியில் திட்டங்களை நிறைவேற்ற விடாமல் தமிழக அரசின் தடை, லோக்சபா தேர்தல் கூட்டணி, ராஜீவ் படுகொலை, இலங்கை இறுதிக்கட்டப் பட்ட போர் நிலவரம் பற்றிய பல கேள்விகளுக்கு பதிலளித்தார்.

இலங்கையில் போர் நிறுத்தப்பட்டு விட்டதாக சொல்லப்பட்டது. ஆனால் நிறுத்தவில்லை. இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரனும் ஒரே பிடிவாதத்துடன் போராடினார்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

‘போரை நிறுத்துமாறு இந்தியா இரு தரப்பினரிடமும் வேண்டுகோள் விடுத்த போதிலும் இரண்டு தரப்பினரும் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை.

போரை நிறுத்தச் சொல்லி பிரபாகரனிடம், இந்திய அரசாங்கம் எவ்வளவு சொல்லியும் கடைசிவரை அவர் அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை. அதனால் தான் அவர் மரணமடைய நேரிட்டது.

இந்தியா சொன்னதைக் கேட்டிருந்தால் இன்றைக்கு பிரபாகரன் உயிரோடு இருந்திருப்பார்’ என்று மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் கூறியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post டெல்லியில் போலந்து நாட்டுப் பெண்னை கடத்தி பலாத்காரம் செய்த சாரதி
Next post யாழில் பிடிபட்டது ஆவா ரவுடிக் கும்பல்; வாள்களும் மீட்பு