அமெரிக்காவில் தரையிறங்கிய விமானம், தீப்பற்றி எரிந்து துணை விமானி பலி

Read Time:1 Minute, 59 Second

002தென் அமெரிக்காவின் மலைகள் சூழ்ந்த பகுதியில் கொலோராடோ மாநிலம் அமைந்துள்ளது. இங்குள்ள அஸ்பென் விமான நிலையத்தில் இன்று ஒரு சிறிய விமானம் தரையிறங்கியது.

விமானியின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடுபாதையில் பாய்ந்த விமானம், கண்ணிமைக்கும் நேரத்தில் தலைகுப்புற புரண்டு சில வினாடிக்குள் தீப்பிடித்து எரியத் தொடங்கியது.

இந்த காட்சியை கண்டு அதிர்ச்சியடைந்த விமான நிலைய தீயணைப்பு படையினர் விரைந்தோடி வந்து தீயை அணைத்து விமானத்தின் உள்ளே இருந்தவர்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

படுகாயமடைந்த விமானி, துணை விமானி ஆகியோரை மீட்ட அவர்கள் மற்றொரு துணை விமானியை தேடும் போது அவர் தனது இருக்கையில் பிணமாக கிடப்பது தெரிய வந்தது. பலியான துணை விமானி மெக்சிக்கோ நகரை சேர்ந்த செர்ஜியோ கர்ரன்சா பிராபட்டா (54) என போலீசார் தெரிவித்தனர்.

நாற்புறமும் மலைகள் அடர்ந்த அஸ்பென் விமான நிலையத்தில் அடிக்கடி இதுபோன்ற விபத்துகள் நடந்து வருகின்றன. அதிவேகமான காற்றின் போக்கு, கொலோராடோவுக்கு சுற்றுலா வரும் செல்வந்தர்கள் ஓடுதளத்தின் ஓரங்களில் ஏராளமான தனியார் விமானங்களை நிறுத்தி வைப்பது போன்றவையே விபத்துகளுக்கான முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மலசலகூடத்தில் வீடியோ கமரா பொருத்திய, வைத்தியருக்கு பிணை
Next post மட்டக்களப்பு: 15 அடி நீள முதலையினைப் பிடித்து மீண்டும் வாவியில் விட்ட அதிகாரிகள்