ஹோட்டல் அறைக்கு யுவதியை அழைத்துச் செல்ல முயன்ற கிரிக்கெட் வீரர்

Read Time:3 Minute, 2 Second

3681Montyஇங்கிலாந்து கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளரான மொன்டி பனீஸர், யுவதியொருவரை தனது ஹோட்டல் அறைக்கு அழைத்துச் செல்ல முயற்சித்தமை அம்பலமாகியுள்ளது.

அவுஸ்திரேலிய அணியுடனான ஆஷஸ் டெஸ்ட் தொடரின் 5 ஆவது போட்டியில் அவமானகரமான தோல்வியை இங்கிலாந்து அணி தழுவிய சில மணித்தியாலங்களின் பின்னர் ‘டேட்டிங்’ இணையத்தளம் ஒன்றின் மொன்டி பனீஸர் தன்னை தொடர்புகொண்டு ஹோட்டல் அறைக்குள் அழைத்துச்செல்ல முயற்சித்ததாக அமெரிக்காவைச் சேர்ந்த யுவதியொருவர் தெரிவித்துள்ளார்.

50 கிலோ மீற்றர் சுற்றுவட்டத்துக்குள் இருப்பபோருடன் தொடர்புகொள்ள அனுமதிக்கும் டேட்டிங் இணையத்தள அப்ஸ் ஒன்றின் மூலம் அப்பெண் தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலிய அணிக்கெதிராக தான் துடுப்பெடுத்தாடும் படமொன்றை இணையத்தளத்தில் மொன்டி பனீஸர் வெளியிட்டிருந்தாராம்.

அலிஸன் என அறியப்பட்ட மேற்படி யுவதி முதல்நாள் போட்டியை பார்வையிடச் சென்றிருந்ததகாவும் தான் மொன்டி பனீஸரை அடையாளம் கண்டுகொண்டதாகவும் கூறியுள்ளார்.

மொன்டி பனீஸரை வெளியில் செல்ல பயிற்றுநர் அனுமதிக்க மாட்டார் என்பதால் அந்த யுவதியை ஹோட்டலுக்கு வருமாறு மொன்டி பனீஸர் அழைத்தாராம்.

‘நான் அவருடன் கிரிக்கெட் பற்றி உரையாட விரும்பினேன். ஆனால் அவர் அதில் ஆர்வம் காட்டவில்லை. என்னை ஹோட்டலுக்கு அழைப்பதிலேயே அவர் அக்கறையாக இருந்தார். அவர்களின் அணி தோல்வியுற்று சில மணித்தியாலங்களில் அவர் அப்படி நடந்துகொண்டது சற்று அபத்தமாக இருந்தது’ என மேற்படி யுவதி தெரிவித்துள்ளார்.

31 வயதான மொன்டி பனீஸர் மது அருந்தாதவராக விளங்கினார். ஆனால் அவரின் மனைவி குர்ஷரான் ரட்டனுடனான திருமணத்தில் சில வருடங்களுக்கு முன்னர் முறிவடைந்தபின் பனீஸரின் நடத்தையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

சில மாதங்களுக்கு முன் அவர் இங்கிலாந்து மதுபான விடுதியொன்றில் சிறுநீர் கழித்தததால் சர்ச்சையில் சிக்கிக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இளம்பெண் ஒருவர், கனடா தமிழரால் பாலியல் பலாத்காரம் !
Next post (PHOTOS) பின்னழகினால் 13 லட்சம் பேரை பின்தொடரச் செய்த யுவதி