விமானத்தில் அழுகையை நிறுத்தாததால் கைக்குழந்தைக்கு அடி-உதை

Read Time:1 Minute, 33 Second

0750ae02-8630-4e18-9b19-9a05f0c12ea9_S_secvpfஅமெரிக்காவில் உள்ள மின்னிபோலீஸ் நகரில் இருந்து அட்லாண்டா நகருக்கு செல்லும் விமானத்தில் ஜெசிக்கா என்ற பெண் தனது 19 மாத ஆண் கைக்குழந்தையுடன் பயணம் செய்தார்.

அப்போது குழந்தை கதறி அழுதான். இது அருகில் இருந்த பயணி ஜோஸ் ரிக்கி ஹூன்லேய் (61) என்பவருக்கு தொல்லையாக இருந்தது. இதனால் ஆத்திரமடைந்த அவர் குழந்தையை அடித்து உதைத்தார்.

இச்சம்பவம் குறித்து தாய் அளித்த புகாரின் பேரில் ஜோஸ் ரிக்கி மீது அட்லாண்டா கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அதில் ஆஜரான ஜோஸ் ரிக்கி, மன உளைச்சலினால் பாதிக்கப்பட்டு முரட்டுத்தனமாக நடந்துகொண்டேன் என குழந்தையின் தாயிடமும், நீதிபதியிடமும் வருத்தம் தெரிவித்தார்.

எனவே அவருக்கு 6 மாதம் சிறை தண்டனை கொடுக்கலாம் என அரசாங்க வக்கீல் வாதிட்டார். ஆனால் நீதிபதி அது போதுமானதல்ல என கூறி ஜோஸ் ரிக்கிக்கு 8 மாதம் ஜெயில் தண்டனை விதித்தார்.

தண்டனை அடைந்தவர் விண்வெளி ஆய்வு மையத்தில் உயர் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சிறுமியை வல்லுறவு செய்த கடற்படை வீரருக்கு விளக்கமறியல்..
Next post ஆவா’ குழுவினருக்கு விளக்கமறியல்