ஹலால் பௌத்த இனத்தவருக்கு ஹராமாகும் : பொதுபல சேனா

Read Time:6 Minute, 12 Second

pikku.Galagodaஉலமா சபையினையும் அவர்களின் ஹலால் சான்றிதழையும் இலங்கையில் இருந்து உடனடியாக தடை விதித்த வேண்டும்.

முஸ்லிம் மக்களின் ஹலால் பௌத்த இனத்தவருக்கு ஹராமாகும் என பொதுபல சேனா பௌத்த அமைப்பு தெரிவித்துள்ளது.

ஹலாலை நிறுத்துவதாக உறுதியளித்த உலமா சபை தனியார் நிறுவனம் என்ற பெயரில் மீண்டும் நாட்டில் ஹலாலை பரப்புகின்றது.

ஹலால் என்ற பெயரில் வஹாப் தீவிரவாதத்தினையே இலங்கையில் பரப்புகின்றனர் எனவும் பொது பலசேனா பௌத்த அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.

பொதுபல சேனா அமைப்பினால் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் சந்திப்பின்போதே இக் கருத்து முன்வைக்கப்பட்டது.

இது தொடர்பாக பொதுபல சேனா பௌத்த அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் கருத்துத் தெரிவிக்கையில்

இலங்கையில் பிரிவினைவாதத்தினை உருவாக்கும் ஹலால் சான்றிதழுக்கு எதிராக பொதுபலசேனா போராடியது.இதன் காரணத்தினால் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை ஹலாலை நிறுத்துவதாக வாக்குறுதியளித்தும் இன்று ஹலாலை மீண்டும் மக்கள் மத்தியில் பரப்பும் செயற்பாட்டினை ஆரம்பித்துள்ளது.

உலமா சபையினரே தனியார் நிறுவனமாக உருவாக்கி ஹலால் சான்றிதழை வழங்கும் செயற்பாட்டினை ஆரம்பித்துள்ளனர்.

இலங்கையில் பௌத்த கொள்கைகளை மாற்றி முஸ்லிம் தீவிரவாதத்தினை உருவாக்கும் உலமா சபையினையும் அவர்களின் ஹலால் சான்றிதழையும் உடனடியாக இலங்கை ????

முஸ்லிம்களின் ஹலாலை இலங்கை மக்கள் பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. பௌத்தர்கள், தமிழர்கள் எவ்வாறு வாழ்கின்றார்களோ அதேபோல் முஸ்லிம்களையும் அரசாங்கம் வாழ வைக்க வேண்டும்.

முஸ்லிம் சமூகத்தின் ஹலாலை அனைத்து செயற்பாடுகளும் பௌத்தர்களுக்கு ஹராமான செயலாகும். அதையும் மீறி ஹலாலை இலங்கையில் பரப்ப நினைத்தால் அதற்கான நடவடிக்கைகளை பொதுபலசேனா மேற்கொள்ளும்.

அரேபியர்களின் ஷரிஆ சட்டத்தின் கொள்கைகளை பௌத்த நாட்டில் ஏன் பயன்படுத்த வேண்டும். ஹலால் என்ற பெயரில் இலங்கையிலும் முஸ்லிம்களின் வஹாப் தீவிரவாதத்தினையே பரப்புகின்றனர்.வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் உண்மையிலேயே ஒரு வீரன். தமிழ் பிரிவினைவாதம் இலங்கைக்கு பொறுத்தமில்லாவிட்டாலும் தமிழ் சமூகத்திற்காக தைரியமாக குரல் கொடுக்கின்றார்.ஆனால் சிங்கள தலைவர்கள் ஏன் ஹலால் பிரிவினைக்காக குரல் கொடுக்கவில்லை. இஸ்லாமிய கொள்கைகளை பரப்புவதை அரசாங்கம் விரும்புகின்றதா அல்லது முஸ்லிம் இனத்திற்கு அரசாங்கம் அஞ்சுகின்றதா ஜனாதிபதி ஏன் இவ் விடயத்தில் அமைதியாக இருக்கின்றார்.

மேலும், இன்று இலங்கையில் பௌத்த யுவதிகள் அதிகளவில் இஸ்லாத்திற்கு மாற்றப்படுகின்றனர். இஸ்லாமியர்களின் மாயைகளுக்கு மயப்பட்டு இளம் பௌத்த யுவதிகளின் வாழ்க்கையினை இஸ்லாமிய சமூகத்தினர் சீரழிக்கின்றனர்.

அதேபோல் இஸ்லாமியர்களின் தேசிய உடையெனக் குறிப்பிடும் நிக்காப், புர்கா ஆடைகளைப் பயன்படுத்தி அனைத்து குற்றச் செயல்களையும் செய்து வருகின்றனர்.

இலங்கையில் மத மாற்றத்தினை செய்து பௌத்த, தமிழர்களை சீரழிக்கும் உலமா சபையினையும் அவர்களின் ஷரிஆ சட்டத்தினை செயற்படுத்தும் காதி நீதிமன்றத்தினையும் உடனடியாக தடை செய்யப்பட வேண்டும்.

மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து இறக்கப்படும் தீவிரவாதத்தில் இருந்து இலங்கையினை காப்பாற்ற வேண்டும்.

இலங்கையில் பௌத்த சிங்களவர்களுக்கும் முஸ்லிம்களுக்குமிடையே பரஸ்பர நல்லுறவு காணப்படுகின்றது.பௌத்த கொள்கைகளை மதிக்கும் அதே முஸ்லிம் மதத்தினை சரியாக பயன்படுத்தும் முஸ்லிம்கள் இருக்கின்றனர்.அவர்களை முஸ்லிம் தீவிரவாதிகளிடமிருந்து காப்பாற்ற வேண்டும்.

முஸ்லிம்கள் சிங்களவர்களிடம் இருந்து பிரிந்து போகவேண்டாமென்றே நாம் குறிப்பிடுகின்றோம். அநாவசியமாக ஹலால் ஷரிஆ என்ற பொய்யான கொள்கைகளைப் பரப்பி இலங்கையில் பிரிவினை வாதத்தினை தூண்டாது சுமுகமான தொரு வாழ்க்கையினை வாழ முஸ்லிம்கள் பழகிக்கொள்ள வேண்டும்.

உண்மையான முஸ்லிம் இலங்கையில் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 7 வருடங்களுக்கு பிறகு மீண்டும் சந்தித்த நயன்தாரா –சிம்பு
Next post புத்தளம் குளத்திலிருந்து சடலம் மீட்பு